கோவிட்-19: மூன்றாவது நாளாக 20க்கும் மேற்பட்ட பாதிப்புகள் பதிவாகியுள்ளன

மேலும் 23 புதிய கோவிட்-19 பாதிப்புகள் இன்று பிற்பகல் 12 மணி வரை பதிவாகியுள்ளன. தொடர்ந்து மூன்றாவது நாளாக 20க்கும் மேற்பட்ட பாதிப்புகள் பதிவாகியுள்ளன.

மொத்த பாதிப்புகளில் 17 பாதிப்புகள் உள்நாட்டில் ஏற்பட்ட தொற்று எனவும், ஆறு இறக்குமதி பாதிப்புகளாக உள்ளன என்றும் சுகாதார அமைச்சு தனது அறிக்கையில் கூறியுள்ளது.

நாட்டில் ஏற்பட்ட 17 தொற்று பாதிப்புகளில், 10 பாதிப்புகள் மலேசியர் சம்பந்தப்பட்டதாகவும், ஏழு பாதிப்புகள் மலேசியர் அல்லாதவர்களிடமும் உள்ளன.

இறக்குமதி பாதிப்புகளில் நான்கு மலேசிய குடிமக்கள் மற்றும் இரண்டு மலேசியர் அல்லாதவர்களை உள்ளடக்கியுள்ளன. அதில், சிங்கப்பூரிலிருந்து வந்த (3 பாதிப்புகள்), இந்தோனேசியா (1 பாதிப்பு), பிலிப்பைன்ஸ் (1 பாதிப்பு) மற்றும் ரஷ்யா (1 பாதிப்பு) ஆகியவை அடங்கும்.

இது கோவிட்-19 நோய்த்தொற்றுடன் செயலில் உள்ள மொத்த பாதிப்புகளின் எண்ணிக்கையை 167 ஆகக் கொண்டுவருகிறது. இதுவரையிலான பாதிப்பு எண்ணிக்கை மொத்தம் 8,884 ஆக உள்ளன.

தீவிர சிகிச்சை பிரிவில் (ஐ.சி.யூ) மூன்று நேர்மறையான பாதிப்புகளுக்கு சிகிச்சை அளிக்கப்படுகின்றன. இதில் இரண்டு பாதிப்புகளுக்கு சுவாச உதவி தேவைப்படுகிறது.