அஸ்மின்: நான் ஏன் பி.கே.ஆர் கட்சிக்கு 10 மில்லியன் செலுத்த வேண்டும்?

பி.கே.ஆர் கட்சியிடமிருந்து 10 மில்லியன் கோரிக்கைக் கடிதத்தை நிராகரித்த முன்னாள் பி.கே.ஆர் துணைத் தலைவர் முகமட் அஸ்மின் அலி அவர் அந்தக் கோரிக்கையை நிறைவேற்ற மாட்டார் என்று வலியுறுத்தினார்.

“எதற்காக?”

“நான் ஏன் அவர்களுக்கு (பி.கே.ஆர்) 10 மில்லியன் செலுத்த வேண்டும்? அப்படியே என்னிடம் பணம் இருந்தாலும், நான் அப்பணத்தை மக்களிடம் ஒப்படைப்பேன், பி.கே.ஆர் போன்ற ஊழல் நிறைந்த கட்சியிடம் ஒப்படைக்க மாட்டேன்” என்று கோம்பாக் சட்டமன்ற உறுப்பினருமான அஸ்மின் கூறினார்.

முன்னதாக, பி.கே.ஆர் பொருளாளர் லீ சீயன் சுங், கட்சியை விட்டு வெளியேறிய 19 பி.கே.ஆர் நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் மாநில சட்டமன்ற உறுப்பினர்களுக்கும் கோரிக்கைக் கடிதத்தை வெளியிடுவதாகக் கூறினார். அவர்கள் பி.கே.ஆருக்கு தலா 10 மில்லியன் செலுத்த வேண்டும் என்று அவர் கோரினர்.

கோரிக்கைக் கடிதத்தில், ஏழு நாட்களுக்குள் அவர்கள் அதை செலுத்த வேண்டும் என்றும் அவர்கள் அவ்வாறு செய்யத் தவறினால், கட்சி அவர்கள் மீது மேல் நடவடிக்கை எடுக்குமாறு வழக்கறிஞர்களுக்கு அறிவுறுத்தியுள்ளதாகவும் லீ கூறினார்.

14வது பொதுத் தேர்தலில் பி.கே.ஆர் வேட்பாளர்களால் கையொப்பமிடப்பட்ட ஆவணங்களில் RM10 மில்லியன் இழப்பீடு குறிப்பிடப்பட்டுள்ளது என முந்தைய அறிக்கைகள் குறிப்பிட்டுள்ளன.

இதற்கிடையில், முன்னாள் பி.கே.ஆர் மகளிர் தலைவர் ஹனிசா முகமட் தல்ஹா, அவர் மீது எந்த நடவடிக்கையும் எடுக்க முடியாது என்று நம்புவதாகக் கூறினார். இது அதிகார எல்லைக்கு அப்பாற்பட்டது என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

“கூட்டாட்சி அரசியலமைப்பிற்கு முரணான நடவடிக்கையாக இதை நான் காண்கிறேன், ஏனென்றால், கூட்டாட்சி அரசியலமைப்பு எந்தவொரு குடிமகனுக்கும் எந்தவொரு பதிவு செய்யப்பட்ட அமைப்பிலும் சேர சுதந்திரத்திற்கான உரிமையை வழங்குகிறது.” என்றார்.

பெயரிடப்பட்ட நாடாளுமன்ற மற்றும் சட்டமன்ற உறுப்பினர்களின் பட்டியல் பின்வருமாறு.

முகமட் அஸ்மின் அலி (கோம்பாக் சட்டமன்ற உறுப்பினர்)
ஜுரைதா கமாருதீன் (அம்பாங் சட்டமன்ற உறுப்பினர்)
சைபுதீன் அப்துல்லா (இந்தேரா மக்கோத்தா சட்டமன்ற உறுப்பினர்)
கமாருதீன் ஜாபார் (பண்டார் துன் ரசாக் சட்டமன்ற உறுப்பினர்)
மன்சூர் ஓத்மான் (நிபோங் தெபால் சட்டமன்ற உறுப்பினர்)
ரஷீத் ஹஸ்னோன் (பத்து பகாட் சட்டமன்ற உறுப்பினர்)
சந்தாரா குமார் (சேகாமாட் சட்டமன்ற உறுப்பினர்)
அலி பிஜு (செராடோக் சட்டமன்ற உறுப்பினர்)
ஜொனாதன் யாசின் (ரனாவ் சட்டமன்ற உறுப்பினர்)
பாரு பியான் (சிலாங்காவ் சட்டமன்ற உறுப்பினர்)
டாக்டர் சோங் பாட் புல் (பெமானிஸ் சட்டமன்ற உறுப்பினர்)
முகமட் ஜெய்லானி காமிஸ் (ரெம்பியா சட்டமன்ற உறுப்பினர்)
அப்துல் யூனுஸ் ஜமாஹ்ரி (கோலா க்ராவ் சட்டமன்ற உறுப்பினர்)
முகமட் ஹில்மான் இட்ஹாம் (கோம்பக் செத்தியா சட்டமன்ற உறுப்பினர்)
அஸ்மான் நஸ்ருதீன் (லூனாஸ் சட்டமன்ற உறுப்பினர்)
ராபர்ட் லிங் குய் ஈ (சிடாம் சட்டமன்ற உறுப்பினர்)
ஹனிசா முகமது தல்ஹா (லெம்பா ஜெயா சட்டமன்ற உறுப்பினர்)
தரோயா அல்வி (செமெந்தா சட்டமன்ற உறுப்பினர்)
சுல்கிஃப்லி இப்ராஹிம் (சுங்கை ஆச்சேவின் சட்டமன்ற உறுப்பினர்)