சிவகங்கா திரளை மிக வேகமாக பரவுகிறது – டாக்டர் நூர் ஹிஷாம்

கொரோனாகிருமி | எகிப்து மற்றும் பாகிஸ்தானில் ஒரு முதன்மை பரவலாக (சூப்பர் ஸ்ப்ரெடராக) அடையாளம் காணப்பட்டுள்ள கோவிட்-19 மரபணுவுடன், கெடாவில் தொடங்கிய சிவகங்கா திரளை தொடர்பு கொண்டிருக்கக்கூடும் என சுகாதார அமைச்சு கவலை கொண்டுள்ளது.

ஜித்ராவில் உள்ள ஒரு நாசி கண்டார் உணவக உரிமையாளரிடமிருந்து கண்டுபிடிக்கப்பட்ட இந்த திரளை, நாட்டின் பிற திரளைகளுடன் ஒப்பிடும்போது “மிக வேகமாக” பரவுகிறது என்று சுகாதார இயக்குநர் டாக்டர் நூர் ஹிஷாம் அப்துல்லா இன்று ஒரு செய்தியாளர் கூட்டத்தில் கூறினார்.

“இப்போது சரவாக்கின் ஒன்பது திரளைகளுடனும் இதர திரளைகளுடனும் ஒப்பிடும்போது இந்த திரளை வேகமாக பரவுகிறது.”

“ஒரு ‘சூப்பர் ஸ்ப்ரெடர்’ திரளையான ‘மரபணு 614’ என்ற திரளையை நாம் எதிர்கொள்கிறோமா என்பது குறித்து ஆய்வுகள் நடந்து வருகின்றன.”

“இந்த ‘சூப்பர் ஸ்ப்ரெடர்’ திரளை எகிப்து மற்றும் பாகிஸ்தானில் இருந்து வருவதாக அமைச்சுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.”

“இது ஒரு ‘சூப்பர் ஸ்ப்ரெடர்’ திரளையாக இருக்கலாம்” என்று அவர் இன்று புத்ராஜெயாவில் செய்தியாளர் கூட்டத்தில் கூறினார்.

சிவகங்கா திரளை கடந்த மாதத்தின் பிற்பகுதியில் அந்த உணவக உரிமையாளர் கோவிட்-19க்கு நேர்மறை சோதனை செய்யப்பட்டபோது கண்டறியப்பட்டது.

இந்த நபர் ஜூலை 13 ஆம் தேதி இந்தியாவில் இருந்து திரும்பினார். அவர் வீட்டில் தனிமைப்படுத்துதலுக்கு உட்பட வேண்டிய போதிலும், அந்த உத்தரவை பின்பற்றத் தவறிவிட்டார் என்று கூறப்படுகிறது.

குழந்தைகள் உட்பட கோவிட்-19 இன் 30 நேர்மறையான நிகழ்வுகளை இதுவரை சிவகங்கா திரளை பதிவு செய்துள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

மேலும் ஆறு புதிய பாதிப்புகள்

இன்று பிற்பகல் நிலவரப்படி கோவிட்-19 இன் 15 புதிய பாதிப்புகள் பதிவாகியுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. இதில் ஐந்து இறக்குமதி பாதிப்புகள் மற்றும் பத்து பேர் உள்ளூர் பரவுதல் மூலம் பாதிக்கப்பட்டுள்ளனர்.

சுகாதார இயக்குநர் டாக்டர் நூர் ஹிஷாம் அப்துல்லா, நாட்டில் குடிமக்கள் சம்பந்தப்பட்ட கோவிட்-19 பாதிப்புகள் குறித்த விவரங்களை வழங்கினார்.

ஆறு உள்ளூர் பாதிப்புகள் PUI சிவகங்கா திரளையிலிருந்து வந்தவை என்று அவர் கூறினார். இது, ஜித்ரா கெடாவில் உள்ள ஒரு நாசி கண்டார் உணவகத்தின் உரிமையாளரிடம் இருந்து தொடங்கியது.

கெடாவில் உள்ள ஆறு உள்ளூர் தொற்று பாதிப்புகளுக்கு மேலாக, பிற பாதிப்பு விவரங்களையும் அவர் பின்வருமாறு அளித்தார்:

நெகேரி செம்பிலான் – ஒரு பாதிப்பு
லாபுவான் – ஒரு பாதிப்பு

இவை இரண்டு குடிமக்கள் அல்லாதவர்கள் சம்பந்தப்பட்டது என்று அவர் கூறினார்.

டாக்டர் நூர் ஹிஷாம் இன்று 11 பாதிப்புகள் மீட்கப்பட்டுள்ளதாகவும், மொத்தம் குணமடைந்த நோயாளிகளின் எண்ணிக்கை 8,713 அல்லது மொத்தத்தில் 96.4 சதவிகிதம் என்று தெரிவித்தார்.

“கோவிட்-19 தொடர்பான இறப்பு அதிகரிப்பு எதுவும் இன்று தெரிவிக்கப்படவில்லை. எனவே, மலேசியாவில் கோவிட்-19 இறப்புகளின் மொத்த எண்ணிக்கை 125 அல்லது மொத்த பாதிப்புகளில் 1.38 சதவிகிதமாக உள்ளது” என்று அவர் கூறினார்.

தீவிர சிகிச்சை பிரிவில் (ஐ.சி.யூ) இரண்டு நேர்மறையான பாதிப்புகள் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகின்றன என்றும் அதில் ஒரு பாதிப்புக்கு சுவாச உதவி தேவைப்படுகிறது என்று அவர் கூறினார்.