கோவிட்-19 பாதிப்புகள் இன்று மூன்று இலக்கங்களாக அதிகரித்துள்ளது. இன்று 182 பாதிப்புகள் பதிவாகியுள்ளதாக சுகாதார இயக்குநர் டாக்டர் நூர் ஹிஷாம் அப்துல்லா தெரிவித்துள்ளார்.
ஜூன் 10 அன்று மீட்சிக்கான நடமாட்டக் கட்டுப்பாட்டு உத்தரவு (பி.கே.பி.பி) அமல்படுத்தப்பட்டதிலிருந்து ஒரு நாளில் அதிக எண்ணிக்கையிலான புதிய பாதிப்புகள் பதிவாகியுள்ளன.
“மொத்தத்தில், 181 உள்ளூர் பாதிப்புகளும் ஓர் இறக்குமதி பாதிப்பும் பதிவாகியுள்ளன.”
“இது மலேசியாவில் மொத்த நேர்மறை கோவிட்-19 பாதிப்புகளின் எண்ணிக்கையை 9,810 ஆகக் கொண்டுவருகிறது.”
“கோவிட்-19 நோய்த்தொற்றுடன் செயலில் உள்ள மொத்த பாதிப்புகளின் எண்ணிக்கை 501 ஆகும்.”
“பெரும்பாலான பாதிப்புகள் சபாவில் உள்ள பெந்தேங் திரளையில் இருந்து 167 பாதிப்புகளும், கெடாவில் உள்ள சுங்கை மற்றும் தேலாகா திரளை ஆகியவற்றில் மொத்தம் 14 பாதிப்புகள் உள்ளன” என்று அவர் இன்று ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
நாட்டில் ஏற்பட்ட 181 பாதிப்புகளில் 90 மலேசியர்கள், மற்றும் 91 மலேசியர் அல்லாதவர்கள் சம்பந்தப்பட்டுள்ளனர்.
இதற்கிடையில், சபாவில் உள்ள பெந்தேங் திரளை 167 புதிய பாதிப்புகளை பதிவு செய்வதன் மூலம் தொடர்ந்து பரவி வருவதாக டாக்டர் நூர் ஹிஷாம் தெரிவித்தார்.
“76 பாதிப்புகள் மலேசியர்களையும், அதில் 70 பாதிப்புகள் சிறைக் கைதிகள் மற்றும் ஆறு பாதிப்புகள் நெருங்கிய தொடர்புத் தடம் அறிதல் மூலம் கண்டறியப்பட்ட பொதுமக்களையும் சம்பந்தப்பட்டுள்ளன.”
“மீதமுள்ள 91 பாதிப்புகள் குடிமக்கள் அல்லாதவர்கள் சம்பந்தப்பட்டவை ஆகும். அதில், பிலிப்பைன்ஸ் (61 பாதிப்புகள்) மற்றும் இந்தோனேசியா (30 பாதிப்புகள்)” என்று அவர் மேலும் கூறினார்.
கெடாவில் இன்று சுங்கை திரளையில் 11 பாதிப்புகள் அதிகரித்து, மொத்தம் 50 நேர்மறை பாதிப்புகளாக உள்ளன என்று டாக்டர் நூர் ஹிஷாம் தெரிவித்தார்.
தெலாகா திரளையில் இன்று மூன்று புதிய பாதிப்புகள் கண்டறியப்பட்டுள்ளன. இதனால் மொத்த பாதிப்புகளின் எண்ணிக்கை 16 ஆக உள்ளது.
இதற்கிடையில், தீவிர சிகிச்சை பிரிவில் (ஐ.சி.யு.-வில்) உள்ள நோயாளிகளின் எண்ணிக்கை ஒன்பது பேர் உள்ளனர் என்றும், அவர்களில் ஐந்து பேருக்கு சுவாச உதவி தேவைப்படுகிறது என்றும் அவர் மேலும் கூறினார்.
14 பாதிப்புகள் மீட்கப்பட்டு உள்ளன. இறப்புகளில் அதிகரிப்பு ஏதும், இல்லை. இதுவரை தொற்றுநோயால் ஏற்பட்ட மொத்த இறப்புகளின் எண்ணிக்கை 128 ஆக உள்ளது.
வணக்கம். ஏன் தகவல் தமிழில் தாமதமாக வருகிறது.