பி.என், பாரிசான், பிபிஎஸ் கூட்டணி கட்சிகள் ஒன்றுக்கொன்று மோதல்!

சபா தேர்தலில் தேசிய கூட்டணி, பாரிசான் மற்றும் பிபிஎஸ் ஆகிய அரசியல் கூட்டணிகளுடனான ‘நட்புமுறை மோதல்’ 11 இடங்களிலிருந்து 17 இடங்களாக உயர்ந்துள்ளதாக தெரிகிறது.

பாரிசான் மற்றும் பிபிஎஸ் ஆரம்பத்தில் அறிவித்த வேட்பாளர்களின் எண்ணிக்கையை விட அதிகமான வேட்பாளர்களை நிறுத்தி தங்கள் பேச்சுவார்த்தை ஒப்பந்தத்தை மீறியுள்ளன.

சபா தேர்தலில் 29 இடங்களுக்கு போட்டியிடுவதாக உறுதியளித்த தேசிய கூட்டணி (பி.என்.) மட்டுமே வேட்பாளர்களை நிறுத்துவது குறித்து தனது வாக்குறுதியைக் கடைப்பிடித்துள்ளது.

பிபிஎஸ் 15 வேட்பாளர்களை நிறுத்துவதாக உறுதியளித்தது, ஆனால் இப்போது 22 வேட்பாளர்களை நிறுத்தியுள்ளது. பாரிசான் 40 வேட்பாளர்களை நிறுத்துவதாக உறுதியளித்தது, இறுதியில் இந்த எண்ணிக்கை 41 வேட்பாளர்களாக அதிகரித்தது.

11 இடங்களில் மோதல் ஏற்படுவதைத் தடுக்கும் கடைசி முயற்சியில் முகிதீன் கோத்தா கினாபாலுவுக்கு வந்தும், அது தீர்க்கப்படாமல் முட்டுக்கட்டையில் முடிந்தது.

பாரிசான், பிஎன் மற்றும் பிபிஎஸ் இடையே மோதலைக் காணும் 17 சட்டமன்ற இருக்கைகளின் பட்டியல் இங்கே:

N02 Bengkoka – Umno vs PBS

N05 Matunggong – PBRS vs PBS

N07 Tandek – PBRS vs PBS

N11 Kadamaian – PBRS vs PBS

N22 Tanjung Aru – Umno vs PBS

N25 Kapayan – MCA vs PBS

N26 Moyog – Star vs PBS

N34 Lumadan – Umno vs PBS

N38 Paginatan – Umno vs Star vs PBS

N39 Tambunan – Star vs PBS

N40 Bingkor – Star vs PBS

N41 Liawan – Star vs PBS

N42 Melalap – Umno vs PBS

N44 Tulid – Star vs PBRS vs PBS

N45 Sook – Star vs PBRS

N47 Telupid – Umno vs PBS

N54 Karamunting MCA vs PBS

இதற்கிடையில், மூன்று கட்சிகள் தேசிய கூட்டணி சின்னத்தைப் பயன்படுத்துகின்றன, அதாவது பெர்சத்து (19 இடங்கள்), ஸ்டார் (8 இடங்கள்) மற்றும் எஸ்ஏபிபி (2 இடங்கள்). பிபிஎஸ் அதன் சொந்த சின்னத்தைப் பயன்படுத்துகிறது.

எஸ்ஏபிபி கட்சியை தவிர மூன்று கட்சிகளும் தேசிய கூட்டணி அரசாங்கத்தின் ஒரு பகுதியாகும். ஆனால் சபா தேர்தலில் மூன்று வெவ்வேறு சின்னங்களைப் பயன்படுத்தி போட்டியிடுகின்றன.

ஒப்பந்தத்தில் ஒப்புக் கொள்ளப்பட்டதை மீறி, ஏழு இடங்களுக்கு மேல் போட்டியிடும் பிபிஎஸ் கட்சியின் முடிவு மிகப்பெரிய ஆச்சரியமாக அமைகிறது.

இந்த ஐந்து கூடுதல் இருக்கைகளில் போட்டியிடுவதன் மூலம், பிபிஎஸ் தன் கூட்டணிகளுக்கு எதிராக ஒரு ‘போரை’ தொடங்குவதையும், பி.என் மற்றும் தேசிய கூட்டணி ஏற்கனவே ஒருவருக்கொருவர் மோதிக் கொள்ளும் இடங்களில் மோதலை அதிகப்படுத்துவதையும் காணலாம்.

வாரிசான் பிளஸ் இடையே மோதல் இல்லை

இதற்கிடையில், வாரீசன், பி.கே.ஆர், டிஏபி, அமானா மற்றும் உப்கோ ஆகியவற்றைக் கொண்ட வாரிசன் பிளஸ் கூட்டணி இடையே எந்த மோதலும் இல்லை.

பி.கே.ஆர் ஆரம்பத்தில் விரும்பிய 14 இடங்களில் ஏழு இடங்களை மட்டுமே பெற்றதற்கு வருத்தம் தெரிவித்த போதிலும், பி.கே.ஆர் தலைவர் அன்வார் இப்ராஹிம் ஏழு வேட்பாளர்களுக்கு மேல் பி.கே.ஆர் சின்னத்தைப் பயன்படுத்த அனுமதிக்காததன் மூலம் தனது வாக்குறுதியைக் கடைப்பிடித்ததாகத் தெரிகிறது.

டிஏபி கட்சியும் ஏழு இடங்களில் போட்டியிடுகிறது. அமானா ஓர் இடத்தில் போட்டியிடுகிறது. இரண்டும் வாரிசான் சின்னத்தைப் பயன்படுத்துகின்றன.

வாரிசான் 46 இடங்களுக்கு போட்டியிடுகிறது. உப்கோ தனது சொந்த சின்னத்தை பயன்படுத்தி 12 இடங்களுக்கு போட்டியிடுகிறது.

சபா மாநில தேர்தல்: 447 வேட்பாளர்கள் 73 சட்டமன்ற தொகுதிகள்

செப்டம்பர் 26 அன்று 73 சபா சட்டமன்ற தொகுதிகளில் போட்டியிட 447 வேட்பு மனுக்களைப் பெற்றது தேர்தல் ஆணையம்.

மொத்தம் 73 பார்ட்டி சிந்தா சபா (பிசிஎஸ்) வேட்பாளர்கள், பார்ட்டி வாரிசன் சபா (வாரிசன்) (53), பார்ட்டி பெர்டுபுஹான் கெபாங்சாஆன் சபா பெர்சத்து (யுஎஸ்என்ஓ) (47), பார்ட்டி லிபரல் டெமோக்ராடிக் (எல்டிபி) (46), பாரிசான் நேஷனல் (பிஎன்) 41), தேசிய கூட்டணி (பி.என்) (29), பார்ட்டி ககாசான் ரக்யாத் சபா (ககாசன்) (28), பார்ட்டி பெர்பாடுன் ரக்யாத் சபா (பிபிஆர்எஸ்) (23), பார்ட்டி பெர்சத்து சபா (பிபிஎஸ்) (22).

இது தவிர, பெர்டுபுஹான் கினபாலு புரோகிரீஃப் பெர்சத்து (யு.பி.கே.ஓ) 12 வேட்பாளர்களுடன், பி.கே.ஆர் (7), பார்ட்டி ஹராப்பான் ரக்யாத் சபா (ஹராப்பான் ரக்யாத்) (5), பார்ட்டி கெர்ஜசாமா அனக் நெகேரி (அனக் நெகேரி) (2) மற்றும் அமானா நெகாரா (அமானா), பார்ட்டி கெபாங்சன் சபா (பி.கே.எஸ்) மற்றும் பெர்டுபூஹான் பெர்பாடுவான் ரக்யாத் கெபாங்சான் சபா (பெர்டுபுஹான்) கட்சிக்கு தலா ஒரு வேட்பாளர்.

மொத்தம் 56 சுயேட்சை வேட்பாளர்களும் சபா தேர்தலில் போட்டியிடுவது உறுதி செய்யப்பட்டது.

பெங்கோகா சட்டமன்ற தொகுதியில் அதிக வேட்பாளர்கள் போட்டியிடுவதைக் காணலாம். அதாவது 11 முனை போட்டியும் அதை அடுத்து இனானாம் தொகுதியில் 10 முனை போட்டியும் நிலவுவதை பார்க்கலாம்.