சிலாங்கூரில் உள்ள உணவகங்கள், கடைகள் அதிகாலை 2 மணி வரை செயல்பட அனுமதிக்கப்படுகின்றன

தேசிய பாதுகாப்பு கவுன்சிலின் (எம்.கே.என்) சமீபத்திய முடிவுக்கு ஏற்ப, மாநிலத்தில் உள்ள அனைத்து உணவகங்கள் மற்றும் கடைகளையும் (convenience stores) அதிகாலை 2 மணி வரை செயல்பட சிலாங்கூர் அரசு அனுமதிக்கிறது.

மீட்சிக்கான நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணை (பி.கே.பி.பி) அமல்படுத்தப்பட்டது முழுவதும் சிலாங்கூரில் கோவிட்-19 பாதிப்புகள் பரவுவது கட்டுப்பாட்டில் உள்ளதை கருத்தில் எடுத்துக்கொண்டதன் பின்னர் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது பொருளாதாரத்தை மீட்டெடுக்கும் நேரமாக இருந்தபோதிலும், கோவிட்-19 தொற்றுநோய் பரவாமல் தடுப்பது குறித்து இன்னும் மாநில அரசு முன்னுரிமை அளிக்கிறது என்றும், இது சம்பந்தமாக, வாடிக்கையாளர்கள் மற்றும் நடத்துனர்கள் எப்போதும் நிர்ணயித்த நிலையான இயக்க நடைமுறைகளுக்கு இணங்க வேண்டும் என்றும், கூடல் இடைவெளியை கடைபிடிக்கவும் நினைவூட்டப்பட்டுள்ளனர்.

கடந்த வியாழக்கிழமை, தற்காப்பு அமைச்சர் இஸ்மாயில் சப்ரி யாகோப், 24 மணி நேர உணவகங்கள் மற்றும் கடைகள் அதிகாலை 2 மணி வரை செயல்பட அனுமதிக்கப்பட்டதாக கூறியதாக தெரிவிக்கப்பட்டது.