கோவிட்-19: 38 புதிய பாதிப்புகள், சபாவில் பெரும்பாலான பாதிப்புகள்!

31 புதிய கோவிட்-19 பாதிப்புகள் இன்று மதியம் 12 மணி வரை பதிவாகியுள்ளன, அவற்றில் பெரும்பாலானவை சபாவில் கண்டறியப்பட்டுள்ளன.

சுகாதார இயக்குநர் டாக்டர் நூர் ஹிஷாம் அப்துல்லா இன்று ஒரு அறிக்கையில் இந்த விஷயத்தை தெரிவித்தார்.

இதற்கிடையில், 11 நோயாளிகள் தீவிர சிகிச்சை பிரிவில் (ஐ.சி.யூ) சிகிச்சை பெற்று வருகின்றனர். அந்த எண்ணிக்கையில் ஐந்து நோயாளிகளுக்கு சுவாச உதவி தேவைப்படுகிறது.

பதிவான 31 புதிய பாதிப்புகளில், மூன்று பாதிப்புகள் வெளிநாடுகளில் பாதிப்பு ஏற்பட்டு இறக்குமதி செய்யப்பட்ட பாதிப்புகள் என்றும், மேலும் 28 பாதிப்புகள் உள்நாட்டு பரவுதலுடன் தொடர்புடையவை என்றும் அவர் தெரிவித்தார்.

“மூன்று இறக்குமதி பாதிப்புகள் இந்தோனேசியாவிலிருந்து வந்தவை ஆகும். அவை, சபா மாநிலத்தில் மலேசியர் சம்பந்தப்பட்ட இரண்டு பாதிப்புகளும், கோலாலம்பூரில் ஆகஸ்ட் 31 அன்று மலேசியாவிற்குள் நுழைந்த இந்தோனேசியர் சம்பந்தப்பட்ட ஒரு பாதிப்பும் ஆகும்.

“அவர் அறிகுறிகள் இருந்ததால் அதே நாளில் சுங்கை புலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். 13 செப்டம்பர் 2020 அன்று இரண்டாவது மாதிரி சோதனையில் நோய்க்கு சாதகமாக பரிசோதிக்கப்பட்டார்,” என்று அவர் மேலும் கூறினார்.

நாட்டில் ஏற்பட்ட 28 தொற்றுகளில் 19 பாதிப்புகள் மலேசிய குடிமக்கள் சம்பந்தப்பட்டவை என்றும், ஒன்பது பாதிப்புகள் குடிமக்கள் அல்லாதவர் சம்பந்தப்பட்டவை என்றும் கூறினார்.

சபா 28 புதிய பாதிப்புகளை பதிவு செய்துள்ளது. பெந்தேங் திரளையில் இருந்து மட்டும் 17 பாதிப்புகள் பதிவு செய்யப்பட்டன, அவற்றில் எட்டு பாதிப்புகள் மலேசிய குடிமக்கள் சம்பந்தப்படாதவை ஆகும்.

“மெரோடாய் கிளினிக்கில் ஒரு பாதிப்பு; லாஹாட் டத்து மருத்துவமனையில் ஒரு பாதிப்பு; குயின் குடாட் மருத்துவமனையில் ஒரு பாதிப்பு; தவாவ் மருத்துவமனையில் ஒரு பாதிப்பு; குடாட் மாவட்ட காவல் தலைமையகத்தில் தடுப்புக்காவலில் ஒரு பாதிப்பு, மற்றும் 9454வது நோயாளியுடன் நெருங்கிய தொடர்புடைய ஒரு பாதிப்பும் பதிவாகியுள்ளன.

நெகேரி செம்பிலன் பூங்கா திரளையிலிருந்து நான்கு புதிய பாதிப்புகளும், கெடா சுங்கை திரளையிலிருந்து ஒரு புதிய பாதிப்பும் பதிவு செய்யப்பட்டுள்ளன.

கோவிட்-19 தொடர்பான உயிரிழப்புகளில் அதிகரிப்பு எதுவும் இன்று அறிவிக்கப்படவில்லை. மலேசியாவில் கோவிட்-19 இறப்புகளின் மொத்த எண்ணிக்கை 128 ஆகும்.