அஸ்மின் மற்றும் ஹில்மானின் அலுவலகத்தை கைப்பற்றியது எம்.பி.எஸ்

சிலாங்கூர் செலாயாங்கில் உள்ள முன்னாள் பி.கே.ஆர் பிரதிநிதிகளின் இரண்டு அலுவலகங்கள் இன்று உள்ளூர் அதிகாரிகளால் கைப்பற்றப்பட்டன.

இந்த அலுவலகம் முன்பு அஸ்மின் அலி மற்றும் ஹில்மான் இடாமின் சேவை மையமாக இருந்தது. அஸ்மின், கோம்பாக் நாடாளுமன்ற உறுப்பினராகவும், புக்கிட் அந்தாராபங்சா சட்டமன்ற உறுப்பினராக உள்ளார். அதே நேரத்தில் ஹில்மான், அஸ்மினின் அரசியல் செயலாளரும், கோம்பக் செத்தியா சட்டமன்ற உறுப்பினரும் ஆவார்.

தாமான் பெர்ஜயாவில் செலயாங் நகராட்சி மன்றத்தால் (எம்.பி.எஸ்) அவை கைப்பற்றப்பட்டன.

பி.கே.ஆரிலிருந்து விலகி இப்போது தேசிய கூட்டணியில் இணைந்திருக்கும் அந்த இரண்டு பிரதிநிதிகளின் நிலை தொடர்பாக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டதாக நம்பப்படுகிறது.

ஷெரட்டன் நகர்வில் அஸ்மின் முக்கிய பங்கு வகித்திருந்தார். அதன் பின்னர் கடந்த பிப்ரவரி இறுதியில் பக்காத்தான் ஹராப்பான் (பி.எச்) அரசாங்கம் வீழ்ச்சியடைந்தது.

பாக்காத்தான் அரசாங்கத்துடன் இனி இல்லை என்பதற்காக மாநில அரசாங்கம் இந்த நடவடிக்கையை எடுத்துள்ளது என்று ஹில்மான் கூறினார்.

“சேவை மையத்தை கைப்பற்றி என்னை வெளியேற்றிய சிலாங்கூர் மந்திரி பெசார் அமிருதின் ஷாரி மற்றும் மாநில அரசு எடுத்துள்ள இந்த நடவடிக்கை கோம்பக் செத்தியா சட்டமன்ற மக்களுக்கு தீங்கையே விளைவிக்கும்.”

“சேவை மையம் என்பது நான் மக்கள், உள்ளூர் தலைவர்கள் மற்றும் தேவைப்படும் மக்களைச் சந்திப்பதற்கான ஒரு அலுவலகம்” என்று அவர் குறிப்பிட்டார்.

“இனி ஒரு பி.எச். சட்டமன்ற உறுப்பினராக இல்லாவிட்டாலும், அஸ்மினும் நானும் கோம்பாக் மக்களுக்கு சேவைகளையும் உதவிகளையும் செய்கிறோம்.”

“பி.எச். அரசை ஆதரிக்காததற்காக மாநில அரசு தண்டிக்க விரும்பினால், அவர்கள் எங்களை மட்டுமே எதிர்கொண்டிருக்க வேண்டும், மக்களையும் கோம்பக் செத்தியாவின் வாக்காளர்களையும் தண்டிக்கக்கூடாது” என்று அவர் கூறினார்.

இதற்கிடையில், சிலாங்கூரில் உள்ள அரசு ஊழியர்களை தொடர்ந்து “சேவை சாசனத்தை பாதுகாக்க” கேட்டுக் கொண்டதாகவும், மாநில அரசாங்கத்தின் அரசியல் அழுத்தங்களுக்கு அடிபணிய வேண்டாம் என்றும் ஹில்மேன் விளக்கினார்.

“சிலாங்கூரில் வெற்றியை அடைய நாங்கள் ஒன்றாகத் திரளும் நேரம் வரும்” என்று அவர் சமூக ஊடகங்களில் தெரிவித்தார்.