ஐ.ஜே.என்-னில் சிகிச்சையில் மாமன்னர்

மாமன்னர் அல்-சுல்தான் அப்துல்லா ரியாதுதீன் அல்-முஸ்தபா பில்லா ஷா நேற்று முதல் தேசிய இருதய நிறுவனத்தில் (ஐ.ஜே.என்) சிகிச்சை பெற்று வருகிறார்.

எவ்வாறாயினும், அல்-சுல்தான் அப்துல்லாவின் உடல்நிலை கவலைப்படும் நிலையில் இல்லை என்றும், கூடிய விரைவில் அங்கிருந்து வெளியேறுவார் என்றும் எதிர்பார்க்கப்படுவதாக இஸ்தானா நெகாரா தெரிவித்துள்ளது.

மாமன்னரை மருத்துவர்கள் கண்காணிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளனர் என்று இன்று கோலாலம்பூரில் ஒரு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.