பிரதமர் முஹைதீன் யாசின் நாடளுமன்றத்தில் தனது பெரும்பான்மையை இழந்துவிட்டதாக அம்னோ தலைவர் ஜாஹித் ஹமீடியின் ஊடக அறிக்கை உறுதிப்படுத்தியதாக பக்காத்தான் ஹரப்பன் தலைமைச் செயலாளர் சைபுதீன் நாசுஷன் இஸ்மாயில் தெரிவித்தார்.
சைபுதீன் இன்று முன்னதாக ஜாஹித்தின் அறிக்கை குறித்து கருத்துத் தெரிவித்தபோது, புதிய அரசாங்கத்தை உருவாக்க அம்னோ மற்றும் பிஎன் எம்.பி.க்கள் பலர் பி.கே.ஆர் தலைவர் அன்வர் இப்ராஹிமை ஆதரிக்கிறார்கள் என்பதை வெளிப்படுத்தியது.
நாடளுமன்றத்தில் 222 எம்.பி.க்களில் 113 பேரின் ஆதரவு மட்டுமே பிரதமருக்கு ஒரு மெலிதான ஆதரவை கொடுத்தன. எனவே முஹைதீன் நிச்சயமாக பெரும்பான்மையை இழந்திருப்பார் என்று சைஃபுதீன் கூறினார்.
“அவரது வார்த்தைகள் மிகவும் திட்டவட்டமானவை. பல அம்னோ மற்றும் பிஎன் நாடாளுமன்ற உறுப்பினர்கள் அன்வாருக்கு ஆதரவளிப்பதை அவர் உறுதிப்படுத்தினார், மேலும் அவர் அவ்வாறு செய்வதைத் தடுக்கவில்லை” என்று சைபுதீன் மலேசியாகினியிடம் கூறினார்.