“பெரும்பான்மை உள்ளதாக கூறுவது இது முதல் முறை அல்ல” – மகாதீர்

புதிய அரசாங்கத்தை அமைப்பதற்கு நாடாளுமன்ற உறுப்பினர்களிடமிருந்து போதுமான ஆதரவு இருப்பதாகக் கூறிய பிகேஆர் தலைவர் அன்வார் இப்ராகிமின் அறிக்கையில் நம்பிக்கை இல்லை என்று முன்னாள் பிரதமர் டாக்டர் மகாதீர் முகமட் கூறியுள்ளார்.

2008-ஆம் ஆண்டில் அன்வார் இதையே முன்வைத்தார், ஆனால் அது நிறைவேறவில்லை என்று மகாதீர் கூறினார்.

“இது நிரூபிக்கப்படாத கோரல்களின் மற்றொரு அத்தியாயமா என்பதைப் பார்க்க நாம் காத்திருக்க வேண்டும்,” என்று அவர் கூறினார்.

கோலாலம்பூரில் உள்ள லா மெரிடியன் ஹோட்டலில் அன்வார் பத்திரிகையாளர் சந்திப்பை நடத்திய பின்னர் மகாதீரிடம் இது குறித்து கேட்கப்பட்டது.

அன்வார் முன்னதாக தனக்கு வலுவான, உறுதியான பெரும்பான்மை ஆதரவு இருப்பதாகக் கூறினார், ஆனால் அவருக்கு ஆதரவாக இருக்கும் நாடாளுமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கையை வெளியிட மறுத்துவிட்டார்.