பந்துவான் ப்ரிஹாத்தின் நேசனல் (Bantuan Prihatin Nasional (BPN) 2.0.) மூலம் மக்களுக்கு உதவுவதற்காக 10 பில்லியன் ரிங்கிட் மதிப்புள்ள ஊதிய மானிய திட்டத்தை முகிதீன் யாசின் இன்று அறிவித்தார்.
இன்று ஒரு சிறப்பு செய்தியாளர் கூட்டத்தில், பிரதமர் இந்த கூடுதல் உதவி குடும்பம் மற்றும் ஒற்றை நபர்களை உள்ளடக்கிய B40 குழு, குடும்பம் மற்றும் ஒற்றை நபர்களை உள்ளடக்கிய M40 குழு, மற்றும் பல்வேறு துறைகளில் உள்ள தொழிலாளர்கள் மற்றும் பல்வேறு துறைகளில் மைக்ரோ வர்த்தகர்கள் அடக்கியது என்று விளக்கினார்.
ஜூன் மாதத்தில் 35 பில்லியன் ரிங்கிட் பெஞ்சானா உதவித் தொகை மற்றும் மார்ச் மாதத்தில் 260 பில்லியன் ரிங்கிட் பிரிஹாதின் உதவித் திட்டம் உள்ளிட்ட உதவிகளை புத்ராஜெயா அறிவித்திருந்தது.
முன்னதாக, நம்பிக்கைக் கூட்டணி தலைவர் அன்வார் இப்ராகிம், தமக்கு பெரும்பான்மை இருப்பதாகவும், மொகிதின் யாசின் ஆட்சி கவிழிந்தது என்றும் செய்தியாளர் சந்திப்பு ஒன்றில் கூறியிருந்தார்.
கொவிட்19 தொற்றுநோயின் தாக்கத்தை சமாளிக்க மக்களுக்கு அவர் இந்த உதவித் திட்டங்களை அறிவித்தார்.

























