முஹைடின்: நான் இன்னும் பிரதமராக இருப்பதாகவும், மாமன்னர் தன்னை அரண்மனைக்கு அழைக்கவில்லை என்கிறார்.
முஹைதீன் யாசின் இன்று, அட்டர்னி ஜெனரல் தான் இன்னும் பிரதமராக இருப்பதை உறுதிப்படுத்தியுள்ளதாகவும், இன்னும் அரண்மனைக்கு அழைக்கப்படவில்லை என்றும் கூறினார்.
தம்புனானில் நடந்த ஒரு பேரணியில் பேசிய முஹைதீன், சட்டப்பூர்வமாக பிரதமராக இல்லாவிட்டால், அவர் யாங் டி-பெர்டுவான் அகோங்கை சந்திக்க அழைக்கப்படுவார் என்பதில் உறுதியாக இருந்தார்.
அவர் பிரதமர் பதவியை தொடரமுடியவில்லை எனில், அடுத்தது இரண்டு வழிகள் உள்ளன – அவர் தவி விலகலாம் அல்லது அகோங் நாடாளுமன்றத்தை கலைக்க பரிந்துரைக்கலாம்.
புதன்கிழமை அன்வர், முஹைதீன் எம்.பி.க்களின் பெரும்பான்மை ஆதரவைப் பெறவில்லை என்றும், இதனால் முந்தைய அரசாங்கம் சரிந்தது என்றும் கூறியிருந்தார்.
“நான் சந்தேகப்படுகிறேன். (அன்வாரின் கூற்று) உண்மையானதா அல்லது அது ஒரு அரசியல் சூழ்ச்சியா, என்றாவர் “நாங்கள் அரசியலமைப்பைக் கடைப்பிடிப்போம்” என்று கூறினார்.
முஹைடின் தான் குறுகிய காலம் பிரதமரானால் பரவாயில்லை என்றும் என் வேலையைச் திறம்பட செய்தேன் என நினைக்கிறேன் என்று கூறினார்.

























