நாட்டில் நேற்று கோவிட் -19 தொற்றுநோய் எண்ணிக்கை அதிகரித்ததை தொடர்ந்து தேசிய அளவிலான இயக்க கட்டுப்பாட்டு ஆணை ஏதும் தற்போதிய நிலையில் இருக்காது என்று தற்காப்பு அமைச்சர் இஸ்மாயில் சப்ரி யாகோப் இன்று உறுதியளித்தார்.
பிரதமர் முஹைதீன் யாசின் தலைமையில் நடைபெற்ற சிறப்பு என்.எஸ்.சி கூட்டத்தில் கலந்து கொண்ட பின்னர் இஸ்மாயில் செய்தியாளர் சந்திப்பை நடத்தினார்.
புள்ளிவிவரங்களால் மக்கள் பீதியடைய தேவையில்லை. ஆனால், பொதுமக்கள் தங்கள் பாதுகாப்பை உறுதிப்படுத்திக்கொள்ள வேண்டும் என எச்சரித்தார்.
இயக்க கட்டுப்பாடு தேவைப்பட்டாலும் , சில குறிப்பிட்ட இடங்களுக்கு மட்டுமே இலக்கு வைக்கப்படும் என்றார்.
இப்போதைக்கு, முழு நாட்டிற்கும் இயக்க கட்டுப்பாட்டு ஆணை பிறப்பிக்க முடியாது என்று அவர் வலியுறுத்தினார்.
“உதாரணமாக, ஷா ஆலம் எனுமிடத்தில் புள்ளிவிவகாரங்கள் அதிகம் காணப்பட்டால் நாங்கள் முழு மாநிலத்திற்கும் ஆணை பிறப்பிக்க மாட்டோம். ஆனால் அடுக்குமாடி குடியிருப்பு பகுதிகள் அல்லது சில குறிப்பிட்ட இடங்களுக்கு மட்டும் ஆணை பிறப்பிக்கப்படும்.” என்று அவர் கூறினார்.