இரண்டு வாரங்களுக்கு முன் கியோடோ நியூஸிடம் கொடுத்த பேட்டியில் 15 வது பொதுத் தேர்தலில் தான் போட்டியிடப் போவதில்லை என்று முன்னாள் பிரதமர் டாக்டர் மகாதீர் மொஹமட் கூறியுள்ளார். தற்போது சிங்கப்பூரின் ஸ்ட்ரெய்ட் டைம்ஸிடம் கொடுத்த பேட்டியில் இப்போது போட்டியிட வாய்ப்புள்ளது என்று கூறியுள்ளார்.
கடந்த வெள்ளிக்கிழமை ஒரு நேர்காணலில், லங்காவியின் பாராளுமன்ற உறுப்பினர் அடுத்த தேர்தலில் மகாதீர் போட்டியிட வேண்டாம் என்ற தனது முடிவை முன்மொழிந்தது “எனது ஆதரவாளர்களிடையே மிகுந்த அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது” என்று கூறினார்.
“நான் போட்டியிட விரும்புகிறேன் என சொல்ல வேண்டும் என்று அவர்கள் விரும்புகிறார்கள். 95 வயதில் பெரும்பாலானவர்கள் செயல்பட மாட்டார்கள் என்பது உண்மைதான்.நான் மிகவும் அதிர்ஷ்டசாலி. என்னால் இன்னும் சுறுசுறுப்பாக இருக்க முடிகிறது. ஆனால் நான் வயதாகும்போது என் நிலை மோசமடையும் என்பதை அவர்கள் சிந்திப்பதில்லை” என்று அவர் மேலும் விளக்கினார்.
மகாதீரின் முந்தைய நிலைப்பாடு என்னவென்றால் தனது புதிய கட்சி பார்ட்டி பெஜுவாங் மூலம் தொடர்ந்து ஊழலை எதிர்த்துப் போராட நினைப்பதாகவும் , ஆனால் அவர் அடுத்த தேர்தலில் 98 வயதை எட்டுவதால் போட்டியிடபோவதில்லை என்பதாகும்.ஆனால், தற்போது அடுத்த பொதுத் தேர்தலில் போட்டியிட வாய்ப்புள்ளது.
மேலும், எதிர்க்கட்சித் தலைவரும், நம்பிக்கை கூட்டணியின் தலைவருமான அன்வர் இப்ராஹிம் தனக்கு பெரும்பான்மையான பாராளுமன்ற உறுப்பினர்களின் ஆதரவு இருப்பதாகக் கூறியிருந்தார், ஆனால் அவர் இந்த கூற்றை நிரூபிக்க வேண்டும்.” என்று கூறினார்.