கோவிட்-19 : 563 புதிய நேர்வுகள், 2 இறப்புகள்

நாட்டில் புதிதாக 563 கோவிட்-19 தொற்றுகள் பதிவாகியுள்ள நிலையில், 2 மரணங்கள் சம்பவித்துள்ளன.

இன்று நடந்த ஊடகச் சந்திப்பின்போது, 291 புதிய நேர்வுகளுடன், மிக அதிக எண்ணிக்கையைப் பதிவு செய்த மாநிலமாக சபா தொடர்ந்து திகழ்வதாக சுகாதாரத் தலைமை இயக்குநர் டாக்டர் நூர் ஹிஷாம் அப்துல்லா கூறினார்.

சபாவை அடுத்து, பினாங்கில் 141, சிலாங்கூரில் 69, கோலாலம்பூரில் 28, நெகிரி செம்பிலானில் 12, கெடாவில் 10, பேராக்கில் 4, ஜொகூர், புத்ராஜெயா மற்றும் லாபுவானில் 2 தொற்றுகளும் சரவாக் மற்றும் மலாக்காவில் 1 புதிய தொற்றும் பதிவாகியுள்ளன.

இதன்வழி நாட்டில் மொத்தம் 16,220 தொற்றுகள் இதுவரை பதிவாகியுள்ளன.

மேலும் இன்று, கோலாலம்பூர், சபா, சிலாங்கூர், ஜொகூர் மற்றும் புத்ராஜெயாவில் 6 புதிய திரளைகள் உருவாகியுள்ளதாகவும் டாக்டர் நூர் ஹிஷாம் தெரிவித்தார்.

“பினாங்கில் 141 புதிய நோய்த்தொற்றுகள் இருப்பினும், அவை அனைத்தும் ரிமாண்ட் சிறைச்சாலை திரளையிலிருந்து வந்தவை என்பதால் பொது மக்களிடம் இருந்து அவை தனித்தே இருக்கின்றன,” என்று அவர் மேலும் சொன்னார்.

இன்று 2 இறப்புகள் நேர்ந்துள்ளதால், மரண எண்ணிக்கை 159-ஆக கூடியுள்ளதாகவும் பத்திரிகையாளர் சந்திப்பில் அவர் தெரிவித்தார்.

85 வயது நிரம்பிய ஓர் உள்ளூர் பெண்மணியும் 48 வயதான வெளிநாட்டு பெண்ணும் இன்று மரணமடைந்ததாக அவர் சொன்னார்.