மாமன்னரைச் சந்திக்க ஹாடி அவாங்கிற்கு அழைப்பு இல்லை

பல அரசியல் கட்சிகளின் மூத்தத் தலைமைகள் மாட்சிமைத் தங்கிய மாமன்னர் அல்-சுல்தான் அப்துல்லா ரி’யாதுதீன் அல்-முஸ்தபா பில்லா ஷாவைச் சந்திக்க திட்டமிடப்பட்டுள்ள நிலையில், பாஸ் கட்சிக்கு அவ்வாறு அழைப்பு எதுவும் விடுக்கப்படவில்லை.

இன்று மலேசியாகினி தொடர்பு கொண்டபோது, இந்த விஷயத்தைப் பாஸ் துணைத் தலைவர் துவான் இப்ராஹிம் துவான் மான் தெரிவித்தார்.

“இல்லை,” என்று, இன்று காலை, தனது புலனம் வழி, அவர் மிகச் சுறுக்கமாகத் பதிலளித்தார்.

அஹ்மட் ஜாஹிட், நாளை, வியாழக்கிழமையும் , முகமது சாபு மற்றும் குவான் ஏங் இருவரும் அக்டோபர் 21-ம் தேதியும் மாமன்னர் சந்திப்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.