கோவிட் 19 : 660 புதியத் தொற்றுகள், 4 மரணங்கள்

இன்று நாட்டில் 660 புதிய நேர்வுகள் பதிவாகியுள்ள நிலையில், 4 மரணங்கள் சம்பவித்துள்ளன.

429 சம்பவப் பதிவுகளுடன் சபா தொடர்ந்து முன்னிலையில் உள்ளது. சபாவை அடுத்து, கெடாவில் 113, சிலாங்கூரில் 68, பினாங்கில் 17, லாபுவான் மற்றும் கோலாலம்பூரில் 7, பேராக், சரவாக், ஜொகூரில் 3, மலாக்காவில் 2 மற்றும் நெகிரி செம்பிலானில் 1 எனப் புதியத் தொற்றுகள் பதிவாகியுள்ளதாக சுகாதாரத் தலைமை இயக்குநர் டாக்டர் நூர் ஹிஷாம் அப்துல்லா தெரிவித்தார்.

“ஆக, மலேசியாவில் இதுவரை மொத்தம் 17,540 தொற்றுகள் பதிவாகியுள்ளன.

இன்றைய 4 மரணங்களும் சபாவில் சம்பவித்துள்ளன, அவர்கள் நால்வரும் 47 முதல் 80 வயதுக்குட்பட்ட மலேசியர்கள்.