அமைச்சரவைக்கு முன் அகோங் – பிரதமரர் சந்திப்பு

அமைச்சரவைக்கு முன்னதாக, இன்று , யாங் டி-பெர்துவான் அகோங் சுல்தான் அப்துல்லா சுல்தான் அஹ்மத் ஷா பிரதமர் முஹைதீன் யாசினை, இஸ்தானா நெகாராவில் சந்தித்தார்.

இஸ்தானா நெகாராவின், அதிகாரப்பூர்வ முகநூல் பக்க அறிக்கையின்படி, கூட்டம் காலை 8 மணிக்கு தொடங்கி ஒரு மணி நேரம் நீடித்துள்ளது.

“அமைச்சரவைக்கு முந்தைய இந்தக் கூட்டம், சுல்தான் அப்துல்லாவின் வாராந்திர நடவடிக்கையாகும். அரசாங்க விவகாரங்கள் மற்றும் அது தொடர்பான பிரச்சினைகள் குறித்து பிரதமருடன் கலந்துரையாடி கருத்துக்களைப் பரிமாறிக்கொள்வது அவரது வழக்கம்,” என்று அது கூறியுள்ளது.

  • பெர்னாமா