தனது ஆதரவாளர்களிடமிருந்து எதிர்மறையான கருத்துக்களைப் பெற விரும்பாததால், டிஏபி கவனமாகச் செயல்பட முடிவு செய்துள்ளது.
நாடாளுமன்ற உறுப்பினர்களின் போதுமான ஆதரவு இருப்பதாகக் கூறி அரசாங்கத்தை மாற்ற விரும்பிய எதிர்க்கட்சித் தலைவர் அன்வர் இப்ராஹிமின் நடவடிக்கையைத் தொடர்ந்து, ‘பொறுத்திருந்து பார்ப்போம்’ என டிஏபி கூறியுள்ளது.
கோவிட் 19 தொற்றைக் காரணம் காட்டியப்பின், தேசியக் கூட்டணிக்கான அம்னோவின் ஆதரவை உறுதிபடுத்திய அதன் தலைவர் ஜாஹிட் ஹமிடி, அரசியல் போர்நிறுத்தத்திற்கு அழைப்புவிடுத்துள்ளார்.
முன்னதாக, முன்னாள் பிரதமர் நஜிப்பும் ஜாஹிட்டும் அன்வாரின் இந்த நகர்வுடன் தொடர்புப்படுத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில், தற்போதைய அரசியல் சூழல் தெளிவடைந்த பின், அடிமட்ட ஆதரவாளர்களின் கருத்தைக் கேட்டறிந்த பின்னரே, தனது நிலைப்பாட்டைக் கூற விரும்புவதாக ஒரு பாதுகாப்பான முடிவை டிஏபி எடுத்துள்ளது.
மலேசியாகினியுடன் பேசிய டிஏபி எம்.பி.க்கள், அன்வரின் நடவடிக்கை குறித்து கட்சியிலோ அல்லது பக்காத்தான் ஹராப்பான் (பி.எச்.) பிளஸ் கூட்டணியிலோ அதிகாரப்பூர்வ நிலைப்பாடு எதுவும் இல்லை என்பதை வெளிப்படுத்தினர்.
அன்வரை ஆதரிக்கும் எம்.பி.க்களின் எண்ணிக்கையில் தெளிவு இல்லாததால் அவர்கள் இப்படி சொல்கிறார்கள்.
கட்சித் தலைமைக்கு அதிக ‘அதிகாரமும்’ அரசியல் பதவிகளையும் வழங்க, பிரதமர் முஹைதீன் யாசினை வற்புறுத்தவே அம்னோ அன்வரைப் பயன்படுத்துகிறது என்று நம்புபவர்களும் உள்ளனர்.
எவ்வாறாயினும், டிஏபி 42 எம்.பி.க்களும் பிஎச் தலைமை குழுவின் முடிவுக்கு தாங்கள் இணங்குவதாக அவர்கள் தெரிவித்தனர்.
கட்சி பொதுச்செயலாளர் லிம் குவான் எங்-உடன், டிஏபி எம்.பி.க்கள் ஆன்லைன் சந்திப்பை நடத்தியதாகவும், தற்போதைக்கு “எச்சரிக்கையாகவும் விழிப்புடனும்” இருக்க ஒப்புக்கொண்டதாகவும் கட்சி வட்டாரங்கள் மலேசியாகினியிடம் தெரிவித்தன.
அன்வரின் ஆட்சி கவிழ்ப்பு முயற்சிக்கு டிஏபி தனது ஆதரவை வெளிப்படுத்த வேண்டும் என்று சில நாடாளுமன்ற உறுப்பினர்கள் விரும்பினர், அதேசமயம் அன்வரை ஆதரித்த பி.என். எம்.பி.க்கள் மீது சிலர் சந்தேகமும் கொண்டிருந்தனர்.
மேலும், கடந்த பொதுத் தேர்தலில், டிஏபி-க்கான 90 விழுக்காடு ஆதரவு, சீன வாக்காளர்களிடம் இருந்து கிடைத்ததால், அம்னோவுடன் கைக்கோர்ப்பதில், அவர்களின் கருத்தையும் புறக்கணிக்க முடியாது என்றும் தெரிவித்தனர்..
“நிலையான, நீடித்த அரசாங்கத்தை டிஏபி எதிர்ப்பார்க்கிறது. அன்வாரின் ஆதரவாளர்கள் பற்றி தெரியாததால், முந்தைய பி.எச். நிலைப்பாட்டில் நாங்கள் உறுதியாக இருக்க முடிவெடுத்துள்ளோம்.
“அன்வாரின் ஆதரவாளர்களில் சிலர், எங்களின் சிறந்த கூட்டாளிகளாக இருக்க முடியாதவர்களாக இருக்கலாம்,” என்றும் அவர்கள் விளக்கினர்.
‘பெர்சத்துவுக்கும் அம்னோவுக்கும் இடையிலான சண்டை இது ‘
தற்போதைய அரசியல் நெருக்கடி அம்னோவிற்கும் பெர்சத்துவுக்கும் இடையிலான மோதலிலிருந்து உருவானது, எனவே, டிஏபி அதனைத் தூரத்தில் வைத்திருப்பதுதான் நல்லது என்று குளுவாங் எம்.பி. வோங் சு குய் கூறினார்.
“அம்னோவின் திட்டம் என்னவென்று பார்ப்போம். சபா மாநிலத் தேர்தலுக்குப் பிறகு மோதல் மோசமடைந்துள்ளது, அவர்களுக்கு நியாயமான பதவிகள் அளிக்கப்படவில்லை என்று அம்னோ நம்புகிறது. இதில் டிஏபிக்கு என்ன சம்பந்தம்?
“நிச்சயமாக அம்னோவின் தாக்கம் இதில் இருக்கிறது, பெர்சத்துவுக்கு அழுத்தம் கொடுக்க அது அன்வரைப் பயன்படுத்துகிறது. அன்வருக்குப் போதிய ஆதரவு இருக்கிறதா என்பது, அவருக்கும் அவரது கட்சிக்கும் மட்டுமே தெரியும்,” என்று அவர் மேலும் கூறினார்.
இதற்கிடையே, புருவாஸ் எம்.பி. ஙே கூ ஹாம், முதலில், அம்னோவுடன் இணைந்து பணியாற்ற டிஏபி அதன் ஆதரவாளர்களின் கருத்துக்களை அறிய வேண்டும். அடுத்ததாக, மற்றவர்களின் எதிர்வினைகளையும், அன்வரின் வெற்றிகரமான சதித்திட்டத்திற்கான சாத்தியங்களையும் கண்காணிக்க வேண்டும். மூன்றாவதாக, முடிவு எடுப்பதற்கு முன் அரசியல் சூழல்கள் குறித்து விழிப்புடன் இருக்க வேண்டும் என்றார்.
‘அதிகாரத்திற்காகக் கொள்கையை நாங்கள் அடமானம் வைக்க மாட்டோம்’
அன்வாருடன் கைக்கோர்க்க ஜி.பி.எஸ். மறுத்துள்ளதால், பி.எச்.-க்கு இருக்கும் ஒரே வழி அம்னோவுடன் ஒத்துழைப்பதுதான். ஆனால், இது ஒரு ‘சிறந்த சூழ்நிலை அல்ல’ என்று ஙே கூறினார்.
இது டிஏபி ஆதரவாளர்களிடமிருந்து மோசமான கருத்துக்களுக்கு வித்திடலாம், அதுமட்டுமின்றி, ஜிஇ15-இல் பிஎச்-க்கான வாய்ப்புகளையும் அது பாதிக்கலாம் என்றார் அவர்.
இதே நிலை அம்னோவுக்கும் இருக்கலாம்.
“எங்களின் ஆதரவாளர்கள், நஜிப்பையும் ஜாஹிட்’டையும் ஆதரிக்க மாட்டார்கள் என்பது எங்களுக்குத் தெரியும், ஆனால், அம்னோவில் இருக்கும் ஊழலற்ற எம்.பி.-க்கள் எப்படி,” என்று அவர் கேள்வி எழுப்பினார்.
“இதில் மிகவும் முக்கியமானது, அதிகாரத்திற்காகவும் பதவிக்காகவும் நாங்கள் கொள்கையை அடகு வைத்துவிட்டோம் என்று மக்கள் எண்ணக்கூடாது. அப்படியோர் எண்ணம் மக்களுக்குத் தோன்றுமென்றால், டிஏபி அரசாங்கத்திற்கு வெளியேதான் இருக்கும்.
“நாங்கள் பல ஆண்டுகளாக எதிர்க்கட்சியில்தான் இருந்திருக்கிறோம், அதிகாரத்தை மட்டும் பெறும் நோக்கத்தோடு அரசாங்கத்தை மாற்ற விரும்பும் குழுக்களை டிஏபி ஆதரிக்காது,” என்றும் அவர் கூறினார்.
மற்ற அரசியல் கட்சிகள், தங்கள் வேறுபாடுகளை ஒதுக்கி வைத்துவிட்டு, மக்களின் நலனுக்காக ஒன்றிணைந்து செயல்படத் தயாராக இருந்தால், டிஏபியும் அதைச் செய்ய முடியும் என்று அவர் மேலும் கூறினார்.
முன்னதாக, முன்னாள் பிரதமர் நஜிப், 1எம்டிபி ஊழலில் தனது குற்றத்தை ஒப்புக்கொண்டால் மட்டுமே அவருடன் இணைந்து பணியாற்ற டிஏபி தயாராக உள்ளது என்று டிஏபி மூத்தத் தலைவர் லிம் கிட் சியாங் கூறியுள்ளார்.
சபா தேர்தலுக்கு முன்னதாக, கோத்தா கினாபாலுவில், ஜாஹிட் மற்றும் நஜிப் தலைமையிலான அம்னோவுடன் டிஏபி ஒத்துழைக்காது என்று குவான் எங் கூறினார்.
நாடாளுமன்றத்தைக் கலைக்கலாம்
இதற்கிடையில், அன்வர் எம்.பி.க்களின் ஆதரவு இருப்பதை நிரூபித்தால், தேர்தலை நடத்த ஏதுவாக நாடாளுமன்றத்தை கலைக்க முஹைதீன் மாமன்னரிடம் பரிந்துரைப்பார் என்றும் டிஏபி கவலை கொண்டுள்ளது.
பெயர் குறிப்பிட விரும்பாத ஒரு டிஏபி எம்.பி., 2021 வரவுசெலவு மசோதாவுக்கு வாக்களிக்கும்போதுதான் அந்த முறுகல் நிலையின் உண்மையான நிலை தெரியவுள்ளது என்றார்.
இந்த மசோதா குழு மட்டத்தில் விவாதிக்கப்படும்போது, முஹைதீனின் நிர்வாகத்தை வீழ்த்துவதற்காக, அன்வரை ஆதரிக்கும் எம்.பி.க்கள் அம்மசோதாவுக்கு எதிராக வாக்களிக்க முடியும்.
“அதில் வெற்றி பெற்றால், ஒரு பொதுத் தேர்தல் நடக்கும். அடுத்து மலேசியாவில் என்ன நடக்கும்?
“பிரதமர் பதவியில் இருந்து விலகுவதை விட, முஹைதீன் தேர்தலை எதிர்கொள்வதில் விருப்பம் கொண்டுள்ளார்,” என்று அவர் விளக்கினார்.
தற்போதைய சூழலில் பொதுத் தேர்தல் வந்தால், பி.எச்.-க்கு அது பயனளிக்காது என்றும் மலேசியாவில் கோவிட் -19 தொற்றுநோய் பரவுவதை அது அதிகரிக்கக்கூடும் என்றும் அந்த எம்.பி. நம்புகிறார்.
இது தவிர, அம்னோவுடனான ஒத்துழைப்பையோ அல்லது டாக்டர் மகாதீர் – தெங்கு ரஸலீ இடையேயான கூட்டணியை ஆதரிப்பதையோ அதன் ஆதரவாளர்கள் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள் என்பதால், டிஏபி ஒரு குழப்பத்தில் உள்ளது என்றும் அந்த எம்.பி. தெரிவித்தார்.
“டிஏபி மிகவும் கவனமாக இருக்க வேண்டும், தற்போதைய அரசியல் சூழலில் ‘வாயை மூடிக்கொண்டிருப்பதே’ சிறப்பு ‘என்றும் அந்த பெயர் குறிப்பிட விரும்பாத எ