தேசியக் கூட்டணிக்குத் (பி.என்) தொடர்ந்து ஆதரவளிப்பதற்கான அம்னோவின் முடிவைக் கட்சி “மதிக்கிறது” என்ற பி.கே.ஆர் பொதுச்செயலாளர் சைஃபுதீன் நாசுதியோன் இஸ்மாயிலின் அறிக்கை டிஏபி-க்கு அதிருப்தியைத் தூண்டியுள்ளதாகத் தெரிகிறது.
அம்னோவுடன் ஒத்துழைப்பு இருப்பதை அது சுட்டிக்காட்டுவதாகக் கூறிய டிஏபி பொதுச்செயலாளர் லிம் குவான் எங், அவருடைய கட்சி அதை ஏற்றுக்கொள்ளாது என்றார்.
அம்னோவுடனான ஒத்துழைப்பை ஒருபோதும் டிஏபி விரும்பாது என்பதை பி.கே.ஆர். தலைவர் அன்வர் இப்ராஹிமிடம் டிஏபி தெளிவாகக் கூறியுள்ளதாக அவர் கூறினார்.
“அம்னோவுடன் நாங்கள் சண்டையிட்டோம். சபா மாநிலத் தேர்தலின்போது, கோத்தா கினாபாலுவில், அம்னோ – அஹ்மத் ஜாஹித் ஹமிடி மற்றும் நஜிப் ரசாக் – தலைமையின் கீழ் நாங்கள் இருக்க மாட்டோம் என்று நான் சொன்னேன்,” என்று பினாங்கில், மலேசியாகினிக்கு அளித்த பேட்டியில் லிம் கூறினார்.
“தேர்தலில் நாங்கள் அவர்களுக்கு எதிராக இருக்கிறோம். அம்னோ தலைமையிலான பாரிசான் நேஷனல் ஊழல் அரசாங்கத்திலிருந்து விடுபடுவதற்காக நாங்கள் ஒன்றுபட்டுள்ளோம். அப்படியிருக்க, நாங்கள் எப்படி அந்த நோக்கத்திலிருந்து பின்வாங்கி, அவர்களுடன் இணைந்து பணியாற்ற முடியும்?”
அக்டோபர் 21-ம் தேதி வெளியிடப்பட்ட ஓர் அறிக்கையில், சைஃபுதீன், அம்னோவின் முடிவை பி.கே.ஆர். மதிக்கிறார். ஆனால், அதே எண்ணம் கொண்ட எம்.பி.க்களுடன் சேர்ந்து, “மக்கள் ஆணையை மீட்டெடுப்பதற்கு” கட்சி தொடர்ந்து செயல்படும் என்று கூறியிருந்தார்.
‘அது அன்வரின் சொந்த முடிவு’
சைஃபுதீனின் அறிக்கை “எதிர்பாராதது” என்று லிம் விவரித்தார், மேலும் பக்காத்தான் ஹராப்பானின் (பி.எச்.) நிலைப்பாட்டை அது பிரதிபலிக்கவில்லை.
கடந்த செப்டம்பர் 23-ம் தேதி, அன்வர் தனக்குப் பெரும்பான்மை உள்ளது என்று அறிவித்தபோது, பல அரசியல் கட்சிகள் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் தனித்தனியாக தங்கள் ஆதரவைத் தெரிவித்திருப்பதாக அவரது கட்சி புரிந்து கொண்டது, ஆனால் அது அம்னோ அல்ல, என்று லீ விளக்கமளித்தார்.
“நாங்களும் பி.எச். -உம் எங்கள் நிலைப்பாட்டில் தெளிவாக இருக்கிறோம். நீங்கள் பி.கே.ஆரின் நிலைப்பாடு குறித்துதான் கேட்க வேண்டும்,” என்று அவர் கூறினார்.
அன்வாரின் நடவடிக்கை குறித்து கேட்டதற்கு – டிஏபி மற்றும் அமானாவைக் கலந்தாலோசிக்காமல் எடுக்கப்பட்ட முடிவு அது என்ற லிம், அது உணர்திறனைக் கணக்கில் கொண்டு இரகசியமாக செய்யப்பட வேண்டிய ஒன்று என்று கூறப்பட்டதாகக் கூறினார்.
இருப்பினும், இந்த விவகாரம் நடப்பதற்கு முன்பு அறிவிப்பு செய்யப்பட வேண்டுமா என்று அன்வரிடம் கேட்கப்பட்டதை லிம் ஒப்புக்கொண்டார்.
சபா மாநிலத் தேர்தலுக்கு மூன்று நாட்களுக்கு முன்னர் இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டது குறிப்பிடத்தக்கது.
“இந்த அறிவிப்பைக் கட்சியில் சரியான தரப்பினர் செய்திருக்க வேண்டும் அல்லவா, அன்வர் ஒருவராக தனித்து இல்லாமல்? இது அவரது நம்பகத்தன்மையைப் பாதிக்கும் என்று நாங்கள் கவலைப்படுகிறோம், ஆனால் அவர் மிகவும் நம்பிக்கையுடன் இருக்கிறார்.
“அவர்தா அந்த முடிவை எடுத்தார், அதனால்தான் அறிவிப்பின் போது நாங்கள் அவருடன் இல்லை. அது அவருடைய சொந்த முடிவு,” என்று லிம் மேலும் கூறினார்.