அவசரகாலப் பிரகடனம் : அரண்மனையில் மலாய் ஆட்சியாளர்கள் கூட்டம்

பிரதமர் முஹைதீன் யாசினின் அவசரகால முன்மொழிவு குறித்து விவாதிக்க, மாட்சிமை தங்கிய மாமன்னர் அல் சுல்தான் அப்துல்லா சுல்தான் அஹ்மத் ஷா, மலாய் ஆட்சியாளர்களை இன்று அரண்மனையில் சந்தித்தார்.

அச்சந்திப்பு இன்று மதியம் 2.30 மணியளவில் தொடங்கியது.

கூட்டத்தில் கலந்துகொள்ள ஜொகூர் சுல்தான், சுல்தான் இப்ராஹிம் மதியம் 1.30 மணியளவில் அரண்மனையை வந்து சேர்ந்தார்.

அவரைத் தொடர்ந்து சிலாங்கூர், கெடா, திரெங்கானு, பேராக், பெர்லிஸ் சுல்தான்களும், நெகிரி செம்பிலான் யாங் டி-பெர்த்துவான் பெசாரும் அரண்மனையை அடைந்தனர்.

உள்ளூர் மற்றும் சர்வதேச ஊடகப் பணியாளர்கள் காலை 11 மணி முதல் அரண்மனையைச் சுற்றி காணப்பட்டனர்.