கோவிட் 19 : 823 புதிய தொற்றுகள், 8 மரணங்கள் பதிவு

நாட்டில் இன்று 823 கோவிட் -19 புதிய தொற்றுகள் பதிவாகியுள்ளன, இது நேற்றைய 4 இலக்க எண்ணிக்கையை விட சற்று குறைவு.

அவசரப் பிரிவில் 99 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர், அவர்களில் 30 பேருக்குச் சுவாசக் கருவியின் உதவி தேவைப்படுகிறது.

இதற்கிடையே, இன்று 579 நோயாளிகள் குணமடைந்து வீடு திரும்பினர்.

நாட்டில் இன்று 8 மரணங்கள் சம்பவித்துள்ளன. அனைத்தும் சபா மாநிலத்தில் பதிவாகியுள்ளன.

மேலும் இன்று 9 புதியத் திரளைகள் கண்டறியப்பட்டுள்ளன.

மாநிலம் வாரியாக, புதிய தொற்றுகளின் எண்ணிக்கை :-

சபாவில் 533, பினாங்கில் 97, சிலாங்கூரில் 88, லாபுவானில் 26, நெகிரி செம்பிலானில் 22, சரவாக்கில் 16, ஜொகூரில் 15, கோலாலம்பூரில் 10, திரெங்கானுவில் 7, பேராக்கில் 6, கெடா, கிளந்தான் மற்றும் புத்ராஜெயாவில் 1.