கோவிட் 19 : இன்று 801 புதியத் தொற்றுகள், 8 மரணங்கள் பதிவு

இன்று நாட்டில் 801 கோவிட் -19 புதியத் தொற்றுகள் பதிவாகியுள்ள நிலையில், 7 மரணங்கள் சம்பவித்துள்ளன.

546 புதிய சம்பவங்களுடன், சபா தொடர்ந்து அத்தொற்றுக்கு அதிகம் பாதிப்புக்குள்ளான மாநிலமாகத் திகழ்கிறது என்று சுகாதார இயக்குநர் டாக்டர் நூர் ஹிஷாம் அப்துல்லா, புத்ராஜெயாவில் ஊடகவியலாளர்கள் சந்திப்பில் தெரிவித்தார்.

அவசரப் பிரிவில் 94 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர், அவர்களில் 25 பேருக்குச் சுவாசக் கருவியின் உதவி தேவைப்படுகிறது.

இதற்கிடையே, இன்று 573 பேர் குணமடைந்து வீடு திரும்பினர்.

இன்று 7 மரணங்கள் சபாவிலும் ஒன்று சிலாங்கூரிலும் நேர்ந்துள்ளன. ஆக, இதுவரை நாட்டில் 246 மரணங்கள் இத்தொற்று நோயினால் சம்பவித்துள்ளன. இறந்தவர்கள் அனைவரும் 60 வயதைக் கடந்தவர்கள் என்றும் அவர் கூறினார்.

மேலும் இன்று, 4 புதியத் திரளைகள் கண்டறியப்பட்டுள்ளதாகவும் டாக்டர் நூர் ஹிஷாம் தெரிவித்தார். அவை, ஶ்ரீ காயா திரளை – சபா, கோத்தா கினாபாலு & துவாரான் மாவட்டம், கிரீன்ஹில் திரளை – சரவாக், கூச்சிங் & மிரி மாவட்டம், இடாமான் திரளை – சிலாங்கூர், பெட்டாலிங் & கோம்பாக் மாவட்டம் மற்றும் கோலாலம்பூர், தித்திவங்சா & செராஸ் மாவட்டம் மற்றும் பாயு திரளை – ஜொகூர், ஜொகூர் பாரு & முவார் மாவட்டங்கள் ஆகியவையாகும்.

சபாவை அடுத்து, மாநிலம் வாரியாகப் புதியத் தொற்றுகளின் எண்ணிக்கை :-

சிலாங்கூரில் 88, லாபுவானில் 29, கெடாவில் 28, சரவாக்கில் 27, நெகிரி செம்பிலானில் 24, பினாங்கில் 19, கோலாலம்பூரில் 13, திரெங்கானுவில் 11, ஜொகூரில் 8, பேராக்கில் 6.