கோவிட் -19 பரவலைத் தடுக்க, ‘புலாவ் பெசார்’ தற்காலிகமாக மூடப்பட்டது

கோவிட் -19 நோய்த்தொற்று பரவுவதைத் தடுக்கவும், புதியத் திரளைகள் உருவாவதைத் தவிர்க்கவும், மலாக்கா மாநில அரசு, புலாவ் பெசார் தீவைத் தற்காலிகமாக மூடியது.

நேற்று தொடங்கி, பின்னர் அறிவிக்கப்படும் தேதி வரையில், அத்தீவில் எந்தவொரு நடவடிக்கை மற்றும் பொது மக்களின் வருகை தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

ஒரே நேரத்தில், 50-க்கும் மேற்பட்டவர்களைக் கொண்ட பெரிய அளவிலான கூட்டத்தைக் கண்டிப்பாக தடைசெய்ய வேண்டுமென்ற, மாநிலப் பாதுகாப்பு கூட்டத்தின் முடிவுக்கு ஏற்ப, இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக மலாக்கா மாநில முதல்வர் சுலைமான் முகமட் அலி கூறினார்.

“தற்போது, ​​அங்குள்ள அனைத்து நடவடிக்கைகளும் ஒத்திவைக்கப்படும். அதுபோலவே, புலாவ் உபே , போன்ற மாநிலத்தைச் சுற்றியுள்ள பிற தீவுகளிலும் பெரிய அளவிலான கூட்டங்களை நடத்த அனுமதி கிடையாது,” என்று அவர் செய்தியாளர்களிடம் இன்று கூறினார்.

  • பெர்னாமா