கோவிட் 19 : இன்று 1,755 புதியத் தொற்றுகள், 2 இறப்புகள் பதிவு

நாட்டில், இன்று 1,755 கோவிட் -19 புதியத் தொற்றுகளும் 2 மரணங்களும் பதிவாகியுள்ளதாக சுகாதார இயக்குநர் டாக்டர் நூர் ஹிஷாம் அப்துல்லா, புத்ராஜெயாவில் ஊடகவியலாளர்கள் சந்திப்பில் தெரிவித்தார்.

மலேசியாவில் இதுவரை பதிவான ஆக அதிக எண்ணிக்கை இதுவாகும்.

1,119 புதிய சம்பவங்களுடன், சபா தொடர்ந்து அத்தொற்றுக்கு அதிகம் பாதிப்புக்குள்ளான மாநிலமாகத் திகழ்கிறது. சபாவை அடுத்து பினாங்கில் 192 மற்றும் சிலாங்கூரில் 164 புதிய தொற்றுகள் பதிவாகியுள்ளன.

அவசரப் பிரிவில், இன்று 83 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர், அவர்களில் 32 பேருக்குச் சுவாசக் கருவியின் உதவி தேவைப்படுகிறது.

இன்று 726 நோயாளிகள் குணமடைந்த வேளை, சபாவில் ஒருவரும் கெடாவில் ஒருவரும் மரணமடைந்துள்ளதாக டாக்டர் நூர் ஹிஷாம் சொன்னார்.

மேலும் இன்று, 3 புதியத் திரளைகள் கண்டறியப்பட்டுள்ளதாகவும் டாக்டர் நூர் ஹிஷாம் தெரிவித்தார். அவை, மம்புலூட் திரளை – சபா, ஃபோரோஸ் திரளை –சிலாங்கூர் & கோலாலம்பூர் மற்றும் ரெங்காஸ் திரளை – பேராக் ஆகியவையாகும்.

சபா, பினாங்கு, சிலாங்கூரை அடுத்து, மாநிலம் வாரியாகப் புதியத் தொற்றுகளின் எண்ணிக்கை :-

லாபுவானில் 59, கெடாவில் 19, பேராக்கில் 18, சரவாக் & கோலாலம்பூரில் 17, புத்ராஜெயாவில் 9, திரெங்கானுவில் 8, ஜொகூரில் 3, மலாக்காவில் 2.