நவம்பர் 9 முதல் டிசம்பர் 6 வரை பெரும்பாலான மாநிலங்களில் பி.கே.பி.பி.

கோவிட் -19 பாதிப்புகள் அதிகரித்ததைத் தொடர்ந்து, நவம்பர் 9 முதல் டிசம்பர் 6 வரை, பெரும்பாலான மாநிலங்களில் நிபந்தனைக்குட்பட்ட நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணையை (பி.கே.பி.பி.) அரசாங்கம் செயல்படுத்தவுள்ளது.

கெடா, பினாங்கு, பேராக், நெகிரி செம்பிலான், மலாக்கா, ஜொகூர் மற்றும் திரெங்கானு ஆகிய மாநிலங்களிலும் பி.கே.பி.பி. அமல்படுத்தப்படும் என்று பாதுகாப்பு அமைச்சர் இஸ்மாயில் சப்ரி யாகோப் தெரிவித்தார்.

இது தவிர, கோலாலம்பூர், புத்ராஜெயா, சிலாங்கூர் மற்றும் சபாவில் பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் உள்ள பி.கே.பி.பி. மேலும் 28 நாட்களுக்கு நீட்டிக்கப்படும்.

கோவிட் – 19 பாதிப்புகள் இல்லாத நான்கு மாநிலங்களான பெர்லிஸ், பஹாங், கிளந்தான் மற்றும் சரவாக் இப்பட்டியலில் இல்லை.