நாட்டில், இன்று 1,168 கோவிட் -19 புதியத் தொற்றுகள் பதிவாகியுள்ளதாக சுகாதார இயக்குநர் டாக்டர் நூர் ஹிஷாம் அப்துல்லா, புத்ராஜெயாவில் ஊடகவியலாளர்கள் சந்திப்பில் தெரிவித்தார்.
616 புதிய சம்பவங்களுடன், சபா தொடர்ந்து அத்தொற்றுக்கு அதிகம் பாதிப்புக்குள்ளான மாநிலமாகத் திகழ்கிறது
அவசரப் பிரிவில் 87 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர், அவர்களில் 32 பேருக்குச் சுவாசக் கருவியின் உதவி தேவைப்படுகிறது.
இன்று 1,029 நோயாளிகள் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.
சபா, குயின் எலிசபெத் மருத்துவமனையில் 3 இறப்புகள் பதிவாகியுள்ளதாக டாக்டர் நூர் ஹிஷாம் சொன்னார். ஆக, நாட்டில் இதுவரை 282 பேர் இந்நோய்க்குப் பலியாகி உள்ளனர். இதில் 147 பேர் சபா மாநிலத்தைச் சேர்ந்தவர்கள்.
சபாவை அடுத்து, மாநிலம் வாரியாகப் புதியத் தொற்றுகளின் எண்ணிக்கை :-
சிலாங்கூரில் 247, லாபுவானில் 104, நெகிரி செம்பிலானில் 68, பேராக்கில் 37, கோலாலம்பூரில் 28, சரவாக்கில் 25, பினாங்கில் 18, கெடாவில் 15, ஜொகூரில் 5, திரெங்கானுவில் 3 மற்றும் மலாக்காவில் 2.