கோவிட் 19 : இன்று 852 புதியத் தொற்றுகள், 4 இறப்புகள் பதிவு

நாட்டில், இன்று 8532 கோவிட் -19 புதியத் தொற்றுகள் பதிவாகியுள்ளதாக சுகாதார இயக்குநர் டாக்டர் நூர் ஹிஷாம் அப்துல்லா, புத்ராஜெயாவில் ஊடகவியலாளர்கள் சந்திப்பில் தெரிவித்தார்.

கடந்த 5 நாட்களாக 1,000-த்திற்கும் அதிகமாக இருந்த நோய்த்தொற்றின் எண்ணிக்கை இன்று இறங்கியுள்ளது.

அவசரப் பிரிவில் 94 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர், அவர்களில் 32 பேருக்குச் சுவாசக் கருவியின் உதவி தேவைப்படுகிறது.

இன்று 825 நோயாளிகள் குணமடைந்த வேளை, 4 இறப்புகள் நேர்ந்துள்ளன.

இருவர் சபாவிலும், ஒருவர் பேராக்கிலும், மற்றுமொருவர் கெடாவிலும் மரணமடைந்துள்ளதாக டாக்டர் நூர் ஹிஷாம் சொன்னார். ஆக, இதுவரை நாட்டில் 286 பேர் இந்நோய்க்குப் பலியாகியுள்ளனர்.

மேலும் இன்று, 2 புதியத் திரளைகள் கண்டறியப்பட்டுள்ளதாகவும் டாக்டர் நூர் ஹிஷாம் தெரிவித்தார். அவை, இக்திசாஸ் திரளை – 3 மாநிலங்களை – சிலாங்கூர் (பெட்டாலிங் & கிள்ளான் மாவட்டம்), கிளாந்தான் (ஜெலி மாவட்டம்) மற்றும் நெகிரி செம்பிலான் (சிரம்பான்) உள்ளடக்கியுள்ளது.

அடுத்து, மலாக்கா, அலோர்காஜா & மத்திய மலாக்கா மாவட்டங்களை உள்ளடக்கிய பெரெண்டாம் திரளை.

மாநிலம் வாரியாகப் புதியத் தொற்றுகளின் எண்ணிக்கை :-

சபாவில் 524, சிலாங்கூரில் 136, நெகிரி செம்பிலானில் 104, லாபுவானில் 23, பினாங்கில் 18, கோலாலம்பூரில் 11, பேராக்கில் 7, மலாக்காவில் 5, கெடாவில் 3, கிளாந்தான், சரவாக் மற்றும் புத்ராஜெயாவில் 2, திரெங்கானு மற்றும் ஜொகூரில் 1.