திருத்தம் இல்லாவிட்டால் பட்ஜெட்டை ஆதரிக்க முடியாது – அன்வர்

“மக்கள் நலனுக்காக” திருத்தங்கள் செய்யப்பட்டால் 2021 வரவுசெலவுத் திட்டத்திற்கு மக்களவையின் முழு ஆதரவு கிடைக்கும் என்று எதிர்க்கட்சித் தலைவர் அன்வர் இப்ராஹிம் தெரிவித்தார்.

“நான் இங்கே வலியுறுத்த விரும்புகிறேன், ஓர் எளிய அனுமானத்தை நான் விரும்பவில்லை. நிலைமை இப்போது வேறுபட்டது.

“நாங்கள் கோருவது போல் மக்களின் தலைவிதியைப் பாதுகாக்க திருத்தம் செய்யப்படாவிட்டால், இந்த வரவு செலவு திட்டத்தின் தற்போதைய வடிவத்தில் ‘உறுதியில்லை’ என்பது அரசாங்கத்திற்கும், நிதி அமைச்சருக்கும், பிரதமருக்கும் தெரியும்.

“இந்தப் பட்ஜெட்டிற்கு நாங்கள் அவ்வளவு எளிதில் ஒப்புதல் அளிப்போம் என்பது உறுதியாகத் தெரியவில்லை,” என்று அவர் இன்று நாடாளுமன்றத்தில் பட்ஜெட் குறித்த தனது விவாதத்தில் கூறினார்.

கடந்த வெள்ளிக்கிழமை தாக்கல் செய்யப்பட்ட 2021 வரவு செலவு திட்டம், நம்பிக்கை கூட்டணி (பி.எச்.) பிரதிநிதிகளின் கோரிக்கைகளைப் பூர்த்தி செய்யவில்லை, இரு தரப்பினரின் ஆதரவையும் பெறுவதற்கான ஆரம்ப முயற்சியாக அது இருந்தது குறிப்பிடத்தக்கது எனப் போர்ட்டிக்சன் எம்.பி.யுமான அன்வார் சொன்னார்.