நிபந்தனைக்குட்பட்ட நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணையை (பி.கே.பி.பி) அமல்படுத்துவதைப் பொதுமக்கள் நம்பி, ஏற்றுக்கொள்ள, கோவிட் -19 பாதிப்புகள் தொடர்பான திறந்த தரவை அரசாங்கம் வெளியிட வேண்டும் என்று எதிர்க்கட்சித் தலைவர் அன்வர் இப்ராஹிம் கருதுகிறார்.
தரவுகளை வெளியிடுவதில், அரசாங்கத்தின் வெளிப்படைத்தன்மையைப் பொதுமக்கள் இப்போது மறுக்கத் தொடங்கியுள்ளதாக அன்வர் கூறினார்.
“நான் திறந்த தரவுகளைக் கேட்கிறேன். நான் வலியுறுத்த விரும்புகிறேன், வெளிப்படைத்தன்மை இருக்க வேண்டும், எடுத்துக்காட்டாக சிலாங்கூர், பெட்டாலிங் ஜெயாவில் ஏழு பாதிப்புகள் உள்ளன, எங்கே என்பதை அறிய விரும்புகிறோம், உண்மையை.
“திறந்த தரவுகள் மற்றும் தெளிவான தகவல்கள் இருக்கும்போது, மக்கள் அதிக நம்பிக்கையுடன் உள்ளனர்.
“இப்போது பலர் வாதிட ஆரம்பித்துள்ளனர். மாவட்டங்களில் பதிவுகள் குறைந்து வருகின்றன, ஆனால் அரசாங்கம் பி.கே.பி.பி.-ஐ அமல்படுத்தியுள்ளது,” என்று இன்று மக்களவையில் அவர் பேசினார்.