இன்று மதியம் வரையில், 1,103 கோவிட் -19 புதியத் தொற்றுகள் பதிவான நிலையில், 821 நோயாளிகள் குணமடைந்து வீடு திரும்பியுள்ளதாக சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது.
கிள்ளான் பள்ளத்தாக்கில் 49.3 விழுக்காடு, சபாவில் 26.1 விழுக்காடு, பேராக்கில் 10.5 விழுக்காடு எனப் புதிய நேர்வுகள் பதிவாகியுள்ளன.
கோலாலம்பூர், டாமான்லேலா கட்டுமான தளத் திரளையில், அதிக எண்ணிக்கையிலான புதிய பாதிப்புகள் (385) பதிவாகியுள்ளன.
பேராக்கில் புதிய பாதிப்புகள் (111) திடீரென அதிகரித்ததற்கு, கெடா, அலோர்ஸ்டார் சிறையின் தெம்போக் திரளை காரணமாகும்.
இன்று பஹாங் மற்றும் பெர்லிஸில் புதியத் தொற்றுகள் எதுவும் பதிவாகவில்லை எனச் சுகாதார இயக்குநர் டாக்டர் நூர் ஹிஷாம் அப்துல்லா தெரிவித்தார்.
அவசரப் பிரிவில் 102 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர், அவர்களில் 39 பேருக்குச் சுவாசக் கருவியின் உதவி தேவைப்படுகிறது. 4 மரணங்கள் சபாவில் நேர்ந்துள்ளன.
கோலாலம்பூரை (392) அடுத்து, மாநிலம் வாரியாகப் புதியத் தொற்றுகளின் எண்ணிக்கை :-
சபாவில் 288, சிலாங்கூரில் 151, பேராக்கில் 116, நெகிரி செம்பிலான் 90, பினாங்கில் 26, கெடாவில் 10, லாபுவான் மற்றும் ஜொகூரில் 8, கிளந்தானில் 7, திரெங்கானுவில் 4, மலாக்கா, சரவாக் மற்றும் புத்ராஜெயாவில் 1,
மேலும் இன்று, சபா, கோத்தா கினாபாலு & பெனம்பாங் மாவட்டங்களில் புதிதாகத் மதம்பாய் திரளைக் கண்டறியப்பட்டுள்ளதாகவும் டாக்டர் நூர் ஹிஷாம் தெரிவித்தார்.