விமர்சனம் l தேசியக் கூட்டணியை (பி.என்.) நிறுவ, நான் திட்டமிட்டேன் என்று அஸ்மின் என் மீது குற்றஞ்சாட்டியுள்ளதாக எனக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது
பி.என். ஊழல்வாதிகளால் ஆனது, அதுமட்டுமின்றி, அம்னோ ஆதரவுடன் இருப்பதால் நிச்சயமாக அது உண்மையல்ல என்று நான் பலமுறை விளக்கியுள்ளேன்.
நான் அதைத் திட்டமிட்டிருந்தால், அது நிஜமாகும்போது நான் ஏன் அதை நிராகரிக்க வேண்டும், நான் அதை ஏற்றுக்கொண்டிருந்தால், அஸ்மின் சொன்னபடி நான் நிச்சயமாகப் பிரதமராகி இருப்பேன்.
இரண்டாவதாக, பக்காத்தான் ஹராப்பானை (பி.எச்.) விட்டு வெளியேறி, பி.என். அரசாங்கத்தை அமைப்பதில் யாராவது மகிழ்ச்சியடைவார்கள் என்றால், அது நிச்சயமாக அஸ்மின் மற்றும் முஹைதீனாகதான் இருக்கும், காரணம் அதில் அவர்களுக்குத்தான் அதிக இலாபம்.
இவை அனைத்தும் நடக்கும்போது, பி.கே.ஆரில் அஸ்மினின் நிலையையும் பி.எச். கூட்டணியின் சூழலையும் நாம் மறந்துவிடக்கூடாது. அன்வாரும் அவரது ஆதரவாளர்களும் அஸ்மினை வீழ்த்த திட்டமிட்டனர், இது பி.கே.ஆர். தேர்தலுக்குப் பின்னர் தொடங்கியது.
துணைத் தலைவர் பதவிக்கு, அஸ்மினை எதிர்த்து நின்ற ரஃபிஸியை அன்வர் பகிரங்கமாக ஆதரித்தார், முயற்சி தோல்வியடைந்தபோது, அஸ்மின் தொடர்புடைய ஒரு பாலியம் வீடியோ பரவலானது.
இது அஸ்மின் மீதான அழுத்தத்தை அதிகரித்தது, மேலும் அன்வரின் ஆதரவாளர்கள் சிலர் வீடியோவைப் பரப்புவதில் ஈடுபட்டதாகக் கூறப்பட்டபோது, பி.கே.ஆரில் அஸ்மினின் நிலைப்பாடும் அன்வருடனான அவரது உறவும் “ஏற்றுக்கொள்ள முடியாதது” அல்லது மேம்படுத்த முடியாத ஒன்றாக இருந்தது.
இதன் காரணமாக, நான் எதிர்த்த போதிலும், ஷெராட்டன் நடவடிக்கையை அவர் திட்டமிட்டார், அஸ்மின் ஏன் அவ்வாறு செய்தார் என்பது எனக்குப் புரிகிறது.
ஏனென்றால், அவரைப் பொறுத்தவரை, மிக முக்கியமான விஷயம் அன்வர் பிரதமராக வருவதைத் தடுப்பதாகும். ஆனால் பி.எச். தொடர்ந்து ஆட்சி செய்தால், அன்வருக்கு நிச்சயமாகப் பிரதமராகும் வாய்ப்பு உள்ளது.
அதே நேரத்தில், அஸ்மினும் பிரதமராக விரும்புகிறார். இதன் காரணமாக, அவர் முஹைதீனுடன் சேர்ந்தார், இன்று மிகவும் தெளிவாக உள்ளது, அஸ்மினை முஹைதீன் உண்மையான ஒரு துணைப் பிரதமரைப் போல் நியமித்துள்ளார்.
தவிர, அஸ்மின் நீண்ட காலமாக பி.என். அரசாங்கத்தையும் ஷெரட்டன் நடவடிக்கையையும் திட்டமிட்டுள்ளார் என்பதில் நான் உறுதியாக உள்ளேன், ஏனென்றால், ஷெரட்டன் நடவடிக்கையில் பங்கேற்க ஒன்பது பி.கே.ஆர். எம்.பி.க்களின் ஆதரவைப் பெறுவது அவ்வளவு எளிதானது அல்ல என்று நான் நம்புகிறேன்.
பெர்சத்து மட்டும் பி.எச்.-லிருந்து விலகினால், பி.எச். அரசாங்கத்தை வீழ்த்த முடியாது என்பது அஸ்மினுக்குத் தெரியும். அதனால், அஸ்மினும் வெளியேறியபோது பி.எச். அரசாங்கம் பெரும்பான்மையை இழந்து வீழ்ந்தது.
அன்வரும் டிஏபி-யும் என்னைக் கைவிடத் திட்டமிட்டுள்ளனர், அதற்காக நான் மலாய் கட்சிகளுடன் சேர வேண்டும் என்று முஹைதீனும் ஹம்ஸா ஜைனுதீனும் என்னை நம்ப வைக்க முயன்றனர்.
இது திட்டமிடப்படும்போது, அம்னோ அல்லது இன்னும் துல்லியமாக நஜிப், டிஏபி கட்டுப்பாட்டில் பி.எச். இருக்கிறது என்று கூறி, மலாய் குழுக்கள் பி.எச்.-ஐ வெறுக்க தூண்டினர்.
அதே நேரத்தில், தீயணைப்பு வீரர் முஹம்மது ஆடிப் மரணம், தமிழீழ விடுதலைப் புலிகள் ஒரு பயங்கரவாதக் குழு என்று முத்திரை குத்தியது, பாதுகாப்பு பிரச்சினை மற்றும் மலேசியர்கள் மற்றும் முஸ்லிம்களுடன் தொடர்புடைய எதையும் பி.எச். மற்றும் டிஏபியுடன் தொடர்புபடுத்தி குற்றம் சாட்டினர்.
நிலைமை மிகவும் பதட்டமாக இருந்தது, ஊழலால் பாதிக்கப்பட்டுள்ள மலாய்க்காரர்கள் வெறுப்பைக் காட்டத் தொடங்கினர்.
அதனால்தான், அன்று நான் மலாய்க்காரர்கள் தன்மான மாநாட்டில் கலந்துகொண்டேன், ஆனால் இன்று அதை பி.என். அரசாங்கத்திற்கு ஆதரவளித்ததாக கூறி என்மீது குற்றஞ்சாட்டுகின்றனர்.
பி.என். அரசாங்க உருவாக்கம் மற்றும் ஷெராட்டன் நடவடிக்கை தொடர்பான விஷயங்கள் இவைதான்.
என்னைப் பொறுத்தவரை, நான் அப்போது உழல் அரசியல்வாதிகளுடனான ஒத்துழைப்பை நிராகரித்தேன், நேரடியாக அம்னோவுடன், அதேசமயம் பி.எச்.-உடன் தொடர்ந்து இருக்க விரும்பினேன்.
டாக்டர் மகாதீர் முகமது முன்னாள் பிரதமர், லங்காவி நாடாளுமன்ற உறுப்பினர். இக்கட்டுரை அவரது முகநூல் பதிவிலிருந்து எடுக்கப்பட்டது.