`முஹைதீன் மற்றும் பி.என். அரசாங்கத்தின் நியாயத்தன்மை நிரூபிக்கப்படவில்லை` – ஹசான் கரிம்

விமர்சனம் | 1 டிசம்பர், 2020 வரையில், பிரதமர் முஹைதீன் யாசின் தலைமையிலான தேசியக் கூட்டணி (பி.என்.) அரசாங்கம், 2021 வரவுசெலவு விவாதத்தில், மூன்று முறை குழு அளவிலான வாக்களிப்பில் வென்றுள்ளது.

நவம்பர் 30, திங்கட்கிழமை, பிரதமர் துறை வரவுசெலவுத் திட்டத்திற்கான பிரிந்திசை வாக்களிப்பில், 105 ஆதரவு வாக்குகளுடன் (95 எதிர்ப்பு) பி.என். அரசாங்கம் வென்றது.

அதே நாளில், நிதியமைச்சிற்கான வரவு செலவு திட்டத்திலும், 106 ஆதரவு வாக்குகளுடன் (95 எதிர்ப்பு), பிரிந்திசை வாக்களிப்பில் பி.என். அரசாங்கம் வென்றது.

டிசம்பர் 1-ம் தேதி, வெளியுறவு அமைச்சு மற்றும் தேசிய ஒற்றுமை அமைச்சுக்கான பட்ஜெட்டுக்கள், குரல் வாக்களிப்பால் அங்கீகரிக்கப்பட்டுள்ளன.  பிரிந்திசை வாக்களிப்பு நடைபெறவில்லை.

ஆனால் அதே நாள் பிற்பகலில், தோட்டத் தொழில்துறை மற்றும் பொருட்கள் அமைச்சின் பட்ஜெட்டிற்கு, பிரிந்திசை வாக்களிப்புக்குப் பிறகு 108 முடிவுகள் ஆதரவாகவும், எதிராக 95 முடிவுகளும் பெற்ற நிலையில் ஒப்புதல் அளிக்கப்பட்டது.

இதுவரை பதிவான மொத்த பிரிந்திசை வாக்குகளின் அர்த்தம் என்ன?

முதல் பொருள் என்னவென்றால், சம்பந்தப்பட்ட அமைச்சுகளுக்கான பட்ஜெட் மதிப்பீடுகள் சட்டப்பூர்வமாக அங்கீகரிக்கப்பட்டுள்ளன.

குழு மட்டத்தில், பிரிந்திசை வாக்கெடுப்பில், பி.என். 3-0 என்றக் கணக்கில், பட்ஜெட்டை அங்கீகரிப்பதில் வெற்றி பெற்றிருப்பது, முஹைதீனின் தலைமைத்துவமும் செல்லுபடியாகும் என்று அர்த்தப்படுத்துகிறதா?

அதிகமும் கூடாது, குறைவாகவும் கூடாது

பதில்: இல்லை. பட்ஜெட் ஒப்புதல் முழுமையான பெரும்பான்மை நிபந்தனைகளை விதிக்கவில்லை. பிரிந்திசை வாக்கெடுப்பு நடத்தப்பட்ட நேரத்தில், மக்களவையில் இருந்த உறுப்பினர்களின் எண்ணிக்கையிலிருந்து ஓர் எளிய பெரும்பான்மை வாக்குகளைப் பெற்றது, அவர்கள் பெரும்பான்மையுடன் வென்றனர் மற்றும் பட்ஜெட்டுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது என்று கூற மட்டுமே போதுமானது.

ஆனால் அது பிரதமர் பதவியில் இருந்து வேறுபட்டது. பிரதமர் பதவியின் நியாயத்தன்மைக்கு வாக்களிக்கும் நேரத்தில், மக்களவையில் இருந்த உறுப்பினர்களின் எண்ணிக்கை மட்டுமல்ல, ஒரு முழுமையான பெரும்பான்மை வாக்கெடுப்பு தேவைப்படுகிறது.

கடந்த பொதுத் தேர்தலில், (ஜி.இ) தேர்ந்தெடுக்கப்பட்ட எம்.பி.க்களின் மொத்த வாக்குகள் தேவை. 14-வது ஜி.இ.யில், மொத்தம் 222 எம்.பி.க்கள் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டனர், இது மத்திய அரசியலமைப்பில் கட்டாய எண்ணிக்கையாகும்.

இது கூட்டாட்சி அரசியலமைப்பில் வெளிப்படையாக குறிப்பிடப்பட்டுள்ள 222 எண்ணை விட அதிகமாகவோ அல்லது குறைவாகவோ இருக்கக்கூடாது. இதுவரை, சபா, பத்து சாபி, எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர் இறந்துள்ளார்.

அரசாங்கத் தரப்பில், பேராக், கெரிக் தொகுதியின் எம்.பி. ஒருவரும் இறந்துள்ளார், இது மக்களவையின் மொத்த உறுப்பினர்கள் எண்ணிக்கையை 220-ஆகக் கொண்டுவருகிறது.

மக்களவையில் பெரும்பான்மை ஆதரவைக் கொண்ட பிரதமர் என்பதனையும் பி.என். அரசாங்கத்தின் நியாயத்தன்மையை உறுதிப்படுத்தவும் முஹைடினுக்கு 111 வாக்குகள் தேவை.

நடத்தப்பட்ட மூன்று பிரிந்திசை வாக்குகளைப் பொறுத்தவரை, அரசாங்கத்தால் பெறப்பட்ட அதிகபட்ச வாக்குப்பதிவு 108 மட்டுமே. பி.என். அரசாங்கம் இதுவரை 111 வாக்குகளின் வாசலை எட்டவில்லை.

ஆக, இன்று வரை, மார்ச் 1-ல் பிரதமராகத் தேர்ந்தெடுக்கப்பட்ட முஹைதீன் மற்றும் அவரது அரசாங்கத்தால், அரசியலமைப்புக்குத் தேவைப்படும் பெரும்பான்மையை நிரூபிக்க முடியவில்லை.

இதன் காரணமாக, முஹைதீன் மற்றும் அவர் தலைமையிலான பி.என். அரசாங்கத்தின் நியாயத்தன்மை இன்னும் கேள்விக்குறியாகவே உள்ளது.


ஹாசான் அப்துல் காரிம், ஜொகூர், பாசீர் கூடாங் எம்.பி.