கோவிட் 19 : இன்று 1,141 புதியத் தொற்றுகள், அவசரப்பிரிவில் அதிகமானோர்

நாட்டில், இன்று மதியம் வரையில், 1,141 கோவிட் -19 புதியத் தொற்றுகள் பதிவான நிலையில், இறப்புகள் ஏதும் நேரவில்லை என்று சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது.

இருப்பினும், தீவிரச் சிகிச்சை தேவைப்படும் நோயாளிகள் (129) மற்றும் சுவாசக் கருவியின் உதவி தேவைப்படுபவர்களின் (53) எண்ணிக்கை அதிகரித்துள்ளது.

அதேவேளையில், 1,144 நோயாளிகள் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.

கிள்ளான் பள்ளத்தாக்கில் அதிகமான புதியப் பாதிப்புகள் 578 (50.7 %) பதிவாகியுள்ளன.

நாட்டின் மொத்த வழக்குகளில் சபா (320) மற்றும் சிலாங்கூர் (320) தலா 28 % பாதிப்புகளையும், கோலாலம்பூர் (256) 22.4 % பாதிப்புகளையும் பதிவு செய்துள்ளன.

மலாக்கா மற்றும் திரெங்கானு ஆகிய இரு மாநிலங்களிலும் புதியத் தொற்றுகள் எதுவும் பதிவாகவில்லை எனச் சுகாதார அமைச்சு தெரிவித்தது.

மற்ற மாநிலங்களில் புதியத் தொற்றுகளின் எண்ணிக்கை :-

ஜொகூரில் 69, பினாங்கில் 48, பேராக்கில் 47, கெடாவில் 24, கிளந்தானில் 20, பஹாங் மற்றும் நெகிரி செம்பிலானில் தலா 15, லாபுவானில் 3, புத்ராஜெயாவில் 2, சரவாக் மற்றும் பெர்லிஸ்சில் தலா 1.

மேலும் இன்று, 8 புதியத் திரளைகள் கண்டறியப்பட்டுள்ளன. அவை :-

பினா மூடா கட்டுமானத்தளத் திரளை – கோலாலம்பூர், தித்திவங்சா, லெம்பா பந்தாய் & கெப்போங் மாவட்டங்கள்; கேளரி கட்டுமானத்தளத் திரளை – கோலாலம்பூர், லெம்பா பந்தாய், செராஸ் மாவட்டங்கள்; புக்கிட் டாலாம் திரளை – கோலாலம்பூர், லெம்பா பந்தாய் மாவட்டம்; செம்பாக்கா திரளை – ஜொகூர், கூலாய் & குளுவாங் மாவட்டங்கள்; சுங்கை சின் சின் திரளை – பேராக், பத்தாங் பாடாங் மாவட்டம், ஜொகூர், சிகாமாட் மாவட்டம் & சிலாங்கூர், கிள்ளான் மாவட்டம்; ஹூமா திரளை – கிளந்தான், பாசீர் பூத்தே & கோத்தபாரு மாவட்டங்கள்; ஜாலான் கெந்திங் திரளை –  கோலாலம்பூர், தித்திவங்சா மாவட்டம் & பஹாங், பெந்தோங் மாவட்டம்; அதாபாரா திரளை – பஹாங், குவாந்தான் & பெக்கான் மாவட்டங்கள்.