கோவிட் 19 : இன்று 1,123 புதியத் தொற்றுகள், 4 இறப்புகள்

நாட்டில், இன்று நண்பகல் வரையில், 1,123 கோவிட் -19 புதியத் தொற்றுகள் பதிவான நிலையில், 1,143 நோயாளிகள் குணமடைந்து வீடு திரும்பியுள்ளதாகச் சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது.

391 புதியப் பாதிப்புகளுடன் சபா இன்று மீண்டும் தினசரி பட்டியலில் முதலிடம் பிடித்துள்ளது, அதனைத் தொடர்ந்து கோலாலம்பூரில் 265 மற்றும் சிலாங்கூரில் 221 என அம்மூன்று மாநிலங்களிலும் புதியத்தொற்றின் எண்ணிக்கை 3 இலக்கங்களில் பதிவாகியுள்ளன.

திரெங்கானு மற்றும் பெர்லிஸில் இன்று புதியத் தொற்றுகள் எதுவும் பதிவாகவில்லை எனச் சுகாதார அமைச்சு தெரிவித்தது.

அவசரப் பிரிவில் 130 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர், அவர்களில் 54 பேருக்குச் சுவாசக் கருவியின் உதவி தேவைப்படுகிறது.

இன்று 4 மரணங்கள் பதிவாகியுள்ளன. இருவர் சபாவிலும், ஜொகூர் மற்றும் சிலாங்கூரில் தலா ஒருவர் என, நாட்டில் மொத்தம் 380 இறப்புகள் இதுவரை பதிவாகியுள்ளன.

மாநிலம் வாரியாகப் புதியத் தொற்றுகளின் எண்ணிக்கை :-

ஜொகூர் (66), பினாங்கு (44), பேராக் (39), கிளந்தான் (35), கெடா (30), நெகிரி செம்பிலான் (10), லாபுவான் (10), மலாக்கா (5), புத்ராஜெயா (4), பஹாங் (2) மற்றும் சரவாக் (1).

மேலும் இன்று, 4 புதியத் திரளைகள் கண்டறியப்பட்டுள்ளன. அவை :-

அண்டாலஸ் திரளை – சிலாங்கூர், கிள்ளான் மாவட்டம்; புலாத்தான் கட்டுமானத் தளத் திரளை – கோலாலம்பூர், செராஸ், தித்திவங்சா, லெம்பா பந்தாய் மாவட்டங்கள்; ஜாலான் டோமிஸ் திரளை – சபா, பெனாம்பாங் & தொங்கோட் மாவட்டங்கள்; பத்து தீகா திரளை – சபா, தாவாவ் மாவட்டம்.