நாட்டில், இன்று நண்பகல் வரையில், 1,335 கோவிட் -19 புதியத் தொற்றுகளும் 2 இறப்புகளும் பதிவாகியுள்ளதாக சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது.
அதேவேளையில், 1,069 நோயாளிகள் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.
புதியத் தொற்றுகள் அதிகமாக சிலாங்கூர், நெகிரி செம்பிலான் மற்றும் சபா மாநிலங்களில் பதிவான நிலையில், 6 மாநிலங்கள் மற்றும் கூட்டரசு பிரதேசங்களில் 100-க்கும் அதிகமான புதிய தொற்றுகள் பதிவாகியுள்ளதாக டாக்டர் நூர் ஹிஷாம் இன்று வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளார்.
அவசரப் பிரிவில் 126 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர், அவர்களில் 57 பேருக்குச் சுவாசக் கருவியின் உதவி தேவைப்படுகிறது.
ஈப்போ, பேராக்கில் ஒரு மரணமும் குளுவாங், ஜொகூரில் ஒரு மரணமும் நேர்ந்துள்ளன.
மாநிலங்கள் வாரியாகப் புதியத் தொற்றுகளின் எண்ணிக்கை :-
சிலாங்கூரில் 337, நெகிரி செம்பிலானில் 258, சபாவில் 250, கோலாலம்பூரில் 178, ஜொகூரில் 125, பேராக்கில் 108, பினாங்கில் 31, லாபுவானில் 21, கெடாவில் 17, பஹாங்கில் 4, மலாக்காவில் 3, கிளந்தானில் 2, திரெங்கானுவில் 1.
சரவாக், புத்ராஜெயா மற்றும் பெர்லிஸில் இன்று புதியத் தொற்றுகள் எதுவும் பதிவாகவில்லை எனச் சுகாதார அமைச்சு தெரிவித்தது.
மேலும் இன்று, 3 புதியத் திரளைகள் கண்டறியப்பட்டுள்ளன. அவை :-
ச்செராம் திரளை – நெகிரி செம்பிலான், சிரம்பான் மாவட்டம்; ஜாலான் தம்போய் திரளை – ஜொகூர், ஜொகூர் பாரு மாவட்டம்; புலாவ் பெர்ஹால திரளை – சபா, சண்டாக்கான் மாவட்டம்.