பேராக் டிஏபி : மக்கள் நலன் கருதி, அம்னோவுடன் ஒத்துழைக்கத் தயார்

மக்கள் நலன் கருதி, பேராக்கில் ஒரு நிலையான அரசாங்கத்தை அமைக்க, அம்னோவுடன் ஒத்துழைக்க தயார் என பேராக் டிஏபி கூறியுள்ளது.

“மக்களின் நலனுக்காக, பல இன, வலுவான மற்றும் நிலையான அரசாங்கத்தை உருவாக்க உதவும் எந்தவொரு கட்சியுடனும் பணியாற்ற பேராக் டிஏபி தயாராக உள்ளது,” என்று பேராக் டிஏபி தலைவர் ங்கா கோர் மிங் மலேசியாகினியிடம் தெரிவித்தார்.

முன்னதாக, பேராக்கில் புதிய அரசாங்கத்தை அமைக்கும் முயற்சியில், ஜாஹிட் அனைத்து கட்சிகளுடனும் பேச்சுவார்த்தை நடத்தியதாகக் கூறியிருந்தார்.

இதற்கிடையில், பேராக் பி.கே.ஆர். தலைவர், ஃபர்ஷா வாஃபா சால்வடார் ரிசால் முபாரக் ஒரு புதிய மாநில அரசாங்கத்தை அமைப்பது குறித்து விவாதிக்க அம்னோ தலைவர்களைச் சந்தித்ததை உறுதிப்படுத்தினார்.

“மக்கள் நலனுக்காக நாங்கள் அம்னோவுடன் இணைந்து பணியாற்றத் தயார்,” என்று அவர் மலேசியாகினியிடம் தெரிவித்தார்.

பி.கே.ஆர். அம்னோவுடன் இணைந்து பணியாற்ற தயாராக இருக்கிறது, ஆனால் ஒரு நிபந்தனை, பி.எச். கூட்டணியில் உள்ள டிஏபி மற்றும் அமானா ஆகிய நண்பர்களும் அதில் உள்ளடக்க வேண்டும் என்று அவர் கூறினார்.