‘எதிர்க்கட்சியினருக்கும் ஒதுக்கீடு, ஜொகூர் ஜனநாயகத்தில் ஒரு வரலாறு’

மாநிலத்தில் ஜனநாயகத்தை வலுப்படுத்துவதற்கான முயற்சியில், பல விஷயங்கள் குறித்து விவாதிக்க, ஜொகூர் மந்திரி பெசார் ஹஸ்னி முகமதுவைச் சந்தித்ததாக ஜொகூர் பக்காத்தான் ஹராப்பான் (பி.எச்.) தெரிவித்தது.

ஹஸ்னியுடனான அச்சந்திப்புக்கு, ஜொகூர் எதிர்க்கட்சித் தலைவர் அமினோஹுடா ஹசான் தலைமை தாங்கியதாக பி.எச். ஜொகூர், இன்று ஒரு கூட்டு அறிக்கையில்,

அனைத்து எதிர்க்கட்சி சட்டமன்ற உறுப்பினர்களுக்கும் சமமான ஒதுக்கீடு, மன்றத் தேர்வுக் குழு, மாவட்ட நடவடிக்கை மற்றும் மேம்பாட்டுக் குழு (ஜே.தி.பி.டி) கூட்டத்தில் அனைத்து சட்டமன்ற உறுப்பினர்களின் பங்கேற்பு உள்ளிட்ட பல்வேறு விஷயங்கள் குறித்து அதில் விவாதிக்கப்பட்டது.

“2021 பட்ஜெட் உரையில் தெரிவிக்கப்பட்டபடி, எதிர்க்கட்சி உறுப்பினர்களுக்காக மொத்தம் RM150,000 ஒதுக்கப்பட்டுள்ளது மற்றும் RM50,000 ஒரு முறை திட்டத்தின் வழி வழங்கப்படும் என்று மந்திரி பெசார் சொன்னார்.

“தேர்வுக் குழுவை நிறுவுவது, மாவட்ட நடவடிக்கை மற்றும் மேம்பாட்டுக் குழு கூட்டத்தில் எதிர்க்கட்சி சட்டமன்ற உறுப்பினர்கள் பங்கேற்பதிலும் எந்த தடைகளும் இல்லை என்றும், ஆனால் அது அடுத்த கட்டத்திற்கு கொண்டு செல்லப்பட வேண்டும் மந்திரி பெசார் கூறியுள்ளார்.

“இது ஜொகூர் ஜனநாயகத்தில் ஒரு வரலாறு,” என்று அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

ஜொகூர் அமானா தலைவர் அமினோல்ஹுடா, ஜொகூர் பி.கே.ஆர். துணைத் தலைவர் ஜிம்மி புவா மற்றும் ஜொகூர் டிஏபி செயலாளர் தான் ஹோங் பின் ஆகியோர் அக்கூட்டு அறிக்கையை வெளியிட்டனர்.

முன்னதாக, கோவிட் -19 தொற்றைக் கையாளும் முயற்சியில், எதிர்க்கட்சி உறுப்பினர்கள் உட்பட அனைத்து சட்டமன்ற உறுப்பினர்களுக்கும் கூடுதல் RM50,000 ஒதுக்கீடு செய்யவுள்ளதாக ஹஸ்னி இன்று அறிவித்தார்.

கடந்த மாதம், எதிர்க்கட்சி சட்டமன்ற உறுப்பினர்களுக்கு RM50,000 ஒதுக்கீட்டை RM150,000 ஆக உயர்த்தியதைத் தொடர்ந்து, மொத்த RM200,000 தொகையை வழங்க மாநில அரசு முடிவு செய்துள்ளது.