RM1 மில்லியன் ஊழல் வழக்கில் தெங்கு அட்னானுக்கு டி.என்.ஏ.ஏ. வழங்கப்பட்டது

முன்னாள் கூட்டரசுப் பிரதேச அமைச்சர் தெங்கு அட்னான் தெங்கு மன்சோருக்கு எதிரான RM1 மில்லியன் மதிப்புள்ள ஊழல் வழக்கில், அவரை விடுதலை இல்லாமல் விடுவிக்க (டி.என்.ஏ.ஏ)  உத்தரவிடப்பட்டது.

இன்று காலை, திறந்த நீதிமன்ற நடவடிக்கைகளின் போது, கோலாலம்பூர் உயர்நீதிமன்ற நீதிபதி மொஹமட் நஸ்லான் மொஹமட் கசாலி இந்த உத்தரவை பிறப்பித்தார்.

அம்முடிவைப் படித்தபோது, குற்றம் சாட்டப்பட்டவர் கூண்டில் அமைதியாக இருந்தார்.

அரசு தரப்பு மற்றும் பாதுகாப்பு தரப்பு சமர்ப்பித்த வாதங்களைத் தொடர்ந்து இன்று காலை இந்த முடிவு வெளியிடப்பட்டது.

69 வயதான அந்தப் புத்ராஜெயா நாடாளுமன்ற உறுப்பினர், தொழிலதிபர் தான் ஏங் பூனிடமிருந்து RM1 மில்லியன் ரொக்கத்தைப் பெற்றதாகக் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

இந்தக் குற்றத்தைச் செய்ய தெங்கு அட்னனைத் தூண்டியதாகக் குற்றத்தை ஒப்புக்கொண்ட தான்`னுக்கு, RM1.5 மில்லியன் அபராதம் விதிக்கப்பட்டது.

கோலாலம்பூரில், இன்னொரு உயர்நீதிமன்றத்தில் தெங்கு அட்னானுக்கு மற்றொரு RM2 மில்லியன் மதிப்புள்ள ஊழல் வழக்கு நிலுவையில் உள்ளது குறிப்பிடத்தக்கது.