பெர்சத்து , பாஸ் இல்லாமல் அம்னோ – `ஏன் முடியாது?`

15-வது பொதுத் தேர்தலுக்கு (ஜி.இ.) முன்னதாக, அம்னோ தனது சொந்த பாதையில் செல்ல வேண்டுமானால், அது ஒரு பிரச்சினையாக இருக்காது என்று அம்னோ ஆலோசனைக் குழுவின் தலைவர் தெங்கு ரஸலீ ஹம்சா கூறினார்.

“ஏன் கூடாது?” பெர்சத்து மற்றும் பாஸ் ஆகியவற்றின் பங்களிப்பு இல்லாமல், அம்னோவின் சொந்த திறனில் இயங்குவது பற்றி கேட்டபோது அவர் இவ்வாறு கூறினார்.

“நாங்கள் வழக்கமாக தேசிய முன்னணி அமைத்த அடிப்படையில் சொந்தமாக நகர்கிறோம். எங்கள் செயல்களின் அனைத்து வடிவங்களும் தேசிய வடிவங்கள்.”

அம்னோவைவிட, பெர்சத்து ‘பக்கம்’ அதிகமாக இருக்கும் பாஸ்-இன் அணுகுமுறையைப் பார்க்கும்போது, மத்திய அரசை வழிநடத்துவதற்கான அம்னோவின் வாய்ப்புகளை அது பாதிக்கலாம் என அந்த குவா முசாங் எம்.பி. ஒப்புக் கொண்டார்.

“ஆனால் நினைவில் கொள்ளுங்கள், இதற்கு முன்பு நாங்கள் அவர்களை நம்பியிருக்கவில்லை. நாங்கள் போட்டியிடுகிறோம், அல்லது பொதுத் தேர்தலை தேசிய முன்னணியாக எதிர்கொள்வோம், நிறைய இடங்களை வெல்வோம்.

“இதற்கு முன்னர் நடந்த தேர்தல்களில் நாங்கள் நிரூபித்த பலம் இதுதான்,” என்று அவர் நேற்று தலைநகரில் உள்ள தனது வீட்டில் மலேசியாகினிக்கு அளித்த பேட்டியில் கூறினார்.

தேசியக் கூட்டணி அரசாங்கத்தை ஆதரித்த போதிலும், அம்னோ அக்கூட்டணியில் உறுப்பினராக இல்லை.

உண்மையில், நாடாளுமன்ற இருக்கை பிரதிநிதித்துவம், உறுப்பினர்களின் எண்ணிக்கை மற்றும் அடிமட்ட ஆதரவு ஆகியவற்றின் அடிப்படையில் அளவிடப்படும்போது அம்னோவின் வலிமை மற்ற கட்சிகளை விட அதிகமாக உள்ளது.

சமூகத்தால் ஏற்றுக் கொள்ளக்கூடிய வேட்பாளர்களை அம்னோ தேர்வு செய்ய வேண்டும், அதாவது பிரச்சினைகள் இல்லாத, மக்களுக்கு சேவைகளையும் நலன்புரி உதவிகளையும் வழங்கக்கூடிய பொறுப்பான வேட்பாளர்களாக இருக்க

கடந்த 14-வது பொதுத் தேர்தலில், அம்னோ 54 நாடாளுமன்ற இடங்களை வென்றது, ஆனால் அதன் உறுப்பினர்கள், முன்னாள் மூத்த அம்னோ தலைவர்களால் நிறுவப்பட்ட பெர்சத்து உறுப்பினர்களாக கட்சி தாவியதால், அம்னோ பல இடங்களை இழந்தது.

அம்னோ இப்போது 38 இடங்களைக் கொண்டுள்ளது.

அம்னோ முவாஃபாகாட் நேஷனல் வை பாஸ்-உடன் ஒத்துழைக்குமா அல்லது ஜி.இ.15-க்கு முன்னதாக, பெர்சத்துவுடன் இணையுமா என்பதில் இன்னும் இறுதி முடிவுக்கு வரவில்லை என்று தெங்கு ரஸாலே கூறினார்.

“எல்லாவற்றிற்கும் மேலாக, பாஸ்-உடனான ஒத்துழைப்பை மக்களால் ஏற்றுக்கொள்ள முடியுமா என்பது எங்களுக்குத் தெரியாது,” என்று அவர் கூறினார்,

தேசிய முன்னணியின் கீழ் அம்னோ தேசிய இயல்புடைய, இனவெறியைக் கடைப்பிடிக்காத ஒரு கட்சி என்று அவர் விவரித்தார்.

“ஏனென்றால், ஒரு கட்சியாகவும் தேசிய இயக்கமாகவும், அனைத்து இனங்களையும் அனைத்து கட்சிகளையும் இக்கூட்டணி பிரதிநிதித்துவப்படுத்துகிறது.

“[…] எனவே இந்த நேரத்தில் நாங்கள் அதைத் தலைவர்களிடம் விட்டு விடுகிறோம்,” என்று அவர் கூறினார்.