சுகாதார அமைச்சு இன்று, 1,925 புதிய கோவிட் -19 நேர்வுகளைப் பதிவு செய்துள்ளது.
பாதிக்கும் மேற்பட்ட பாதிப்புகள் கிள்ளான் பள்ளத்தாக்கில் இருந்து, பஹாங்கிலும் பாதிப்புகளின் எண்ணிக்கையில் அதிகரிப்பு காணப்பட்டுள்ளது.
1,123 நோயாளிகள் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். அவசரப் பிரிவில் 117 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர், அவர்களில் 55 பேருக்குச் சுவாசக் கருவியின் உதவி தேவைப்படுகிறது.
இன்று, சுங்கை பூலோ மருத்துவமனையில் 65 வயது நிரம்பிய ஓர் ஆணும், கோத்தபாரு, இராஜா பெரும்புவான் ஜைனாப் மருத்துவமனையில் 68 வயது கொண்ட ஒரு பெண்மணியும் இந்நோய்க்குப் பலியாகியுள்ளனர்.
லாபுவான் மற்றும் பெர்லிஸில் இன்று புதியத் தொற்றுகள் எதுவும் பதிவாகவில்லை எனச் சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
மாநிலம் வாரியாகப் புதியத் தொற்றுகளின் எண்ணிக்கை :-
சிலாங்கூர் (747), கோலாலம்பூர் (360) சபா (230), ஜொகூர் (110), நெகிரி செம்பிலான் (60), பினாங்கு (57), கிளந்தான் (31), பேராக் (17), மலாக்கா (9), கெடா (8), சரவாக் (4), திரெங்கானு (2) மற்றும் புத்ராஜெயா (2).
மேலும் இன்று, 9 புதியத் திரளைகள் கண்டறியப்பட்டுள்ளதாக டாக்டர் நூர் ஹிஷாம் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார். அவை :-
ஶ்ரீ லானாங் பணியிடத் திரளை – சிலாங்கூர், கிள்ளான், கோம்பாக், கோல சிலாங்கூர் & பெட்டாலிங் மாவட்டங்கள்; ஜாலான் ச்சூ பணியிடத் திரளை – கோலாலம்பூர், லெம்பா பந்தாய் மாவட்டம்; ஆவான் பூத்தே கட்டுமானத் தளத் திரளை – கோலாலம்பூர், லெம்பா பந்தாய் மாவட்டம்; இந்தேகா சாதாங் திரளை – கோலாலம்பூர், தித்திவங்சா மாவட்டம்; ஜாலான் சாதாங் திரளை – கோலாலம்பூர், தித்திவங்சா & கெப்போங் மாவட்டங்கள், சிலாங்கூர், உலு லங்காட், கிள்ளான், பெட்டாலிங் & கோம்பாக் மாவட்டங்கள் & பஹாங், பெந்தோங் மாவட்டம்; தெம்போக் மெம்பாக்கா திரளை – பஹாங், பெந்தோங் மாவட்டம்; திம்பாங் டாயாங் திரளை – சபா, கோத்த பெலுட் மாவட்டம்; தெகுலி திரளை – சபா, புதாதான் மாவட்டம்; ரம்பாய் திரளை – மலாக்கா, மலாக்கா தெங்கா & அலோர் காஜா மாவட்டங்கள், சிலாங்கூர், பெட்டாலிங் மாவட்டம் & நெகிரி செம்பிலான், ரெம்பாவ் மாவட்டம்.