வாக்குகள் | கடந்த 20 ஆண்டுகளாக தொடர்ந்து ஒவ்வொரு ஆண்டும், ஆண்டு நிறைவுருவதற்கு முன்பு, மலேசியாகினி அவ்வாண்டின் செய்தி தூண்டுநர் யார் என்பதைப் பட்டியலிடும்.
ஒரு செய்தி தூண்டுநர் என்பது, “ஒரு நபரின் செய்கை, தலைப்புச் செய்திகளாக, பொது சொற்பொழிவுகளுக்குத் தாக்கமாக மற்றும் மலேசிய அரசியலில் ஒரு சிறந்த திசையில் அல்லது வேறுவிதமாக ஒரு தாக்கத்தை உருவாக்குவது” என்று வரையறுக்கப்படுகிறது.
2020 செய்தி தூண்டுநர்களாக மலேசியாகினி 22 நபர்களைப் பரிந்துரைத்தது.
மொத்தம் 1,013 பேர் வாக்களிப்பில் பங்கெடுத்தனர் – 0 மிகக் குறைந்தது மற்றும் 10 மிக உயர்ந்தது.
அதன் முடிவு…
பி.கே.ஆரை மறைமுகமாக பலவீனப்படுத்திய அஸ்மின் அலிக்கு நெருக்கமான ஜுரைடா கமருதீன் (4,011 வாக்குகள்)
கூட்டரசுப் பிரதேச அமைச்சரும், தேசிய முன்னணி தலைமைச் செயலாளருமான (அம்னோ) அன்னுவார் மூசா (4,104 வாக்குகள்) இவர் தேசியக் கூட்டணியின் வலுவான ஆதரவாளரும்கூட.
சபாவுக்குச் சென்று, கோவிட் நோயால் பாதிக்கப்பட்ட மத விவகார அமைச்சர் சுல்கிஃப்லி மொஹமட் (4,134 வாக்குகள்)
தெங்கு ஜஃப்ருல் அஜீஸ், சிஐஎம்பி வங்கியிலிருந்து வெளியேறி, நிதி அமைச்சரானவர் (4,298 வாக்குகள்)
இஸ்மாயில் சப்ரி யாகோப், மூத்த அமைச்சர் (பாதுகாப்பு), தேசியப் பாதுகாப்பு மன்றத்தின் செய்தித் தொடர்பாளர் (4,506 வாக்குகள்)
அஸ்ஹர் அஸிஸான் ஹருன் அல்லது ஆர்ட் ஹருன், தேர்தல் ஆணையத்திலிருந்து வெளியேறி, மக்களவையின் சபாநாயகரானார் (4,709 வாக்குகள்)
முன்னாள் சபா முதல்வரான மூசா அமன் – நீதிமன்றத்தில் விடுவிக்கப்பட்ட பின்னர், மாநில அதிகாரத்திற்குத் திரும்ப முயன்றார், ஆனால் முடிவுகள் எதிர்பார்த்த அளவு இல்லாமல் போனது (4,845 வாக்குகள்)
காவல்துறையின் சோதனை நடவடிக்கையை முகநூலில் நேரடி ஒளிபரப்பு செய்ததால் நீதிமன்ற வழக்கை எதிர்கொள்ளும் முன்னாள் யு.எம். ஆர்வலர் வோங் யான் கே (5,107 வாக்குகள்)
தனிமைப்படுத்துதல் உத்தரவை மீறியதால், தண்டம் விதிக்கப்பட்ட அமைச்சர் கைருதீன் அமன் ரசாலி (5,113 வாக்குகள்)
சபா மாநிலத் தேர்தலில் தோல்வியுற்ற வாரிசான் தலைவர் ஷாஃபி அப்தால், பி.எச். பிளஸ்-ஆல் திறன்மிக்க பிரதமர் வேட்பாளராக குறிப்பிடப்பட்டவர். (5,359 வாக்குகள்)
முன்னாள் மந்திரி சையத் சதிக் சையத் அப்துல் ரஹ்மான், தனது வழிகாட்டியான மகாதீர் முகமதுவிடம் இருந்து வேறுபட்ட திசையைத் தேர்ந்தெடுத்து, இளைஞர்களுக்காக ஒரு கட்சியை உருவாக்கினார் (5,362 வாக்குகள்)
எபிட் லூ, மதப் போதகர் மற்றும் தயாளர் (5,456 வாக்குகள்)
பழங்குடி குழந்தைகளுக்குச் சேவைகள் ஆற்றியதால், 2020-ஆம் ஆண்டு உலகளாவிய ஆசிரியர்
விருதின் இறுதிப் போட்டியாளர்கள் வரிசையில் தேர்வான சாமுவேல் ஐசையா அல்லது ஆசிரியர் சேம், (5,821 வாக்குகள்)
ஷெராட்டன் நடவடிக்கைகளில் முக்கிய நபரான அஸ்மின் அலி (6,044 வாக்குகள்)
இன்னும் பிரதமர் வேட்பாளராகவே இருக்கும் அன்வர் இப்ராஹிம் (6,132 வாக்குகள்)
மாமன்னர், சுல்தான் அப்துல்லா சுல்தான் அகமது ஷா (6,177 வாக்குகள்)
டாக்டர் மகாதீர் மொஹமட், இரண்டு முறை பிரதமரானவர், ஆனால் தனது சொந்த கூட்டணிக்குத் துரோகம் இழைத்தார் எனக் கூறியதால் இராஜினாமா செய்தார் (6,179 வாக்குகள்)
இணைய அணுகலைப் பெற, மரத்தில் ஏறிய சபா மாணவர் விவொனா மொசிபின் (6,216 வாக்குகள்)
நஜிப் அப்துல் ரசாக் அல்லது போஸ்கு
, பிரதமராக இருந்து ஒரு குற்றவாளியானவர் (6,345 வாக்குகள்)
முஹைதீன் யாசின், அவரது முன்னாள் முதலாளியான மகாதீரிடமிருந்து பிரதமர் பதவியை எடுத்துக் கொண்டார். (6,424 வாக்குகள்)
மலேசியாவின் கொரோனா வைரஸ் போராட்டத்தின் பொது முகம், டாக்டர் நூர் ஹிஷாம் அப்துல்லா (7,740 வாக்குகள்)
கோவிட் -19 தொற்றுக்கு எதிராகப் போராடிய முனைமுகப் பணியாளர்கள், நமது மருத்துவர்கள், தாதியர், மருத்துவமனையின் பிற ஊழியர்கள், காவல்துறையினர் மற்றும் தீயணைப்பு வீரர்கள் (8,006 வாக்குகள்)