ஒன்பது ஈரச் சந்தைகள் மற்றும் பல்பொருள் அங்காடிகள் கோவிட் -19 தொற்றால் பாதிப்பு

ஊழியர்கள் அல்லது வாடிக்கையாளர்களிடையே, கோவிட் -19 நோய்த்தொற்று காரணமாக, அதிகமான வணிக வளாகங்கள் துப்புரவுப் பணிக்காக தற்காலிகமாக மூடப்பட்டன.

கடந்த இரண்டு வாரங்களாக, நாடு முழுவதும் பல பல்பொருள் அங்காடிகள் மற்றும் ஈரச் சந்தைகள் இதே போன்ற பிரச்சினைகளை எதிர்கொண்டுள்ளன.

தொற்றுநோயால் பாதிக்கப்பட்ட பின்னர், கிருமி நீக்கம் செய்ய தற்காலிகமாக மூடப்பட்டதாக அறிவிக்கப்பட்ட சந்தைகள் மற்றும் பல்பொருள் அங்காடிகள் பின்வருமாறு :-

  1. சிலாங்கூர், கிள்ளான் ஈரச் சந்தை (17 டிசம்பர்)

டிசம்பர் 29 நிலவரப்படி, 364 நேர்வுகளைப் பதிவு செய்துள்ளது, பாசார் பாரு திரளையின் ஒரு பகுதியாகும்.

  1. ஜொகூர், லார்க்கின் ஈரச் சந்தை (17 டிசம்பர்)

கோவிட் -19 தொற்றுக்கு சில ஊழியர்கள் ஆளானதால், கிருமிநாசினி பணிகளுக்காக சந்தையை மூட உத்தரவிடப்பட்டது என்று ஜொகூர் சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது.

  1. நெகிரி செம்பிலான். சிரம்பான். ஃபோரெஸ்ட் ஹைட்ஸ் ஏகோன்சேவ் (20 டிசம்பர்)

ஊழியர்கள் மத்தியில் தொற்று கண்டறியப்பட்ட பின்னர், கிருமி நீக்கம் செய்ய மூடப்பட்டது. இது பெர்சியரான் ஹைட்ஸ் திரளையுடன் இணைக்கப்பட்டுள்ளது, டிசம்பர் 29 வரை 77 பாதிப்புகளைக் கொண்டிருந்தது.

  1. சிலாங்கூர், க்ளோ டாமான்சாரா, ஜெயா குரோஸர் (24 டிசம்பர்)

கோவிட் -19 தொற்று அதன் ஊழியர்களில் ஒருவருக்கு உறுதிசெய்யப்பட்டதை அடுத்து, கிருமிநாசினி பணிக்காக தற்காலிகமாக மூடப்பட்டது. சம்பந்தப்பட்ட ஊழியர் கடைசியாக டிசம்பர் 18 வரை வளாகத்தில் இருந்தார். மற்ற அனைத்து ஊழியர்களும் கோவிட் -19 ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாக ஜெயா மளிகை நிறுவனம் தெரிவித்துள்ளது.

  1. கோலாலம்பூர், கே.எல். எக்கோ சிட்டி, ஜெயா கிரோஸரின் கிளை நிறுவனமான பங்சார் சந்தை (27 டிசம்பர்)

பேரங்காடியின் அறிவிப்பின்படி, கோவிட் -19 பாதிப்பு கண்டறியப்பட்ட பின்னர் வணிகத் தளம் தற்காலிகமாக மூடப்பட்டது. அங்காடி முழுமையாக கிருமி நீக்கம் செய்யப்பட்டுள்ளதாக அதன் பிரதிநிதி உறுதியளித்தார்.

  1. சிலாங்கூர், பந்திங் ஈரச் சந்தை (27 டிசம்பர்)

இந்த இடத்துடன் தொடர்புடைய 25 பாதிப்புகள் கண்டறியப்பட்ட பின்னர், ஜனவரி 7-ம் தேதி வரை கிருமிநாசினி வேலை மற்றும் அதன் தொடர்புடையவர்களைக் கண்காணிக்கும் நோக்கத்திற்காகச் சந்தை மூடப்பட்டுள்ளது.

பாதிக்கப்பட்டவர்களின் 43 நெருங்கிய தொடர்புகள் பரிசோதிக்கப்பட்டுள்ளதாகவும், 101 வர்த்தகர்கள் நாளை சோதனை செய்யப்படுவார்கள் என்றும் சிலாங்கூர் சுகாதார இயக்குநர் டாக்டர் ஷாரி நகாடிமன் தெரிவித்தார்.

  1. திரெங்கானு, கோல திரெங்கானு, பாயாங் ஈரச் சந்தை (28 டிசம்பர்)

இந்த சந்தைக்கு வந்த மூன்று வாடிக்கையாளர்கள் கோவிட் -19 தொற்றால் பாதிக்கப்பட்டதாக கோல திரெங்கானு எம்.பி. அஹ்மத் அம்சாத் ஹாஷிம் தெரிவித்தார். இருப்பினும், திரையிடப்பட்ட 126 வர்த்தகர்களுக்கு அந்நோய் கண்டிருக்கவில்லை.

  1. சிலாங்கூர், கோத்த கெமுனிங், குவேய்சைட் மால், ஜெயா கிரோஸர் (29 டிசம்பர்)

கோவிட் -19 தொற்று அதன் ஊழியர்களில் ஒருவருக்கு உறுதிசெய்யப்பட்டதை அடுத்து, கிருமிநாசினி பணிக்காக தற்காலிகமாக மூடப்பட்டது. கடைசியாக பாதிக்கப்பட்ட அந்த ஊழியர் டிசம்பர் 27 வரை பேரங்காடியில் இருந்துள்ளார்.

  1. ஜொகூர், தாமான் ஜொகூர் ஜெயா ஈரச் சந்தை (29 டிசம்பர்)

மீன் வியாபாரி ஒருவருக்கு தொற்று கண்டறியப்பட்டதைத் தொடர்ந்து, நேற்று தொடங்கி ஒரு வாரத்திற்குத் துப்புரவுப் பணிகளுக்காக சந்தை மூடப்பட்டதாக ஓரியண்டல் டெய்லி நாளிதழ் தெரிவித்துள்ளது.