கட்டாயத் தொழிலாளர் பிரச்சினைகள் இருக்கலாம் எனக் கவலைகொண்ட அமெரிக்க சுங்க மற்றும் எல்லை பாதுகாப்பு (Customs and Border Protection – சிபிபி) துறை, செம்பனை எண்ணெய் உற்பத்தியாளர் சைம் டார்பி பிளான்டேஷன் பெர்ஹாட்-இன் தயாரிப்புகளுக்குக் கட்டுப்பாடு விதித்துள்ளது.
“சைம் டார்பி பெருந்தோட்ட செம்பனை எண்ணெய் மீதான வெளியீட்டுத் தடை ஆணையை (Withhold Release Order) வெளியிடுவது, சர்வதேச தொழிலாளர் அமைப்பின் (ஐ.எல்.ஓ) 11 குறிகாட்டிகளுக்கு ஒப்ப இருப்பதைக் காட்டும் நியாயமான தகவல்களை அடிப்படையாகக் கொண்டது,” என்று அவர் ஓர் அறிக்கையில் தெரிவித்தார்.
இந்த உத்தரவின் மூலம், அனைத்து அமெரிக்க துறைமுகங்களிலும் உள்ள அதன் அதிகாரிகள், சைம் டார்பி மற்றும் மலேசியத் தொடர்புடைய நிறுவனங்களால் தயாரிக்கப்பட்ட செம்பனை எண்ணெய் கொண்ட அனைத்து தயாரிப்புகளிலிருந்தும் விலகுவதாக சிபிபி தெரிவித்துள்ளது.
தொடர்பு கொண்டபோது, சைம் டார்பியின் செய்தித் தொடர்பாளர் ஒருவர் தங்கள் நிறுவனம் அதற்கு விரைவில் பதிலளிக்கும் என்று கூறினார்.
இவ்வாண்டு தொடக்கத்தில், டாப் க்ளோவ் கார்ப் பெர்ஹாட் மற்றும் எஃப்.ஜி.வி. ஹோல்டிங்ஸ் பெர்ஹாட் ஆகியவற்றிலும் சிபிபி இதேபோன்றப் பொருளாதாரத் தடைகளை விதித்தது.
இரு நிறுவனங்களும் அக்குற்றச்சாட்டுகளை மறுத்தன, அதேசமயம் அவர்கள் தங்கள் ஊழியர்களின் நல்வாழ்வை மேம்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் கூறினர்.
ஐ.எல்.ஓ. கட்டாயத் தொழிலாளர் வழிகாட்டுதல்களில் : பாதிப்படையும் படியான துன்புறுத்தல், மோசடி, நடமாட்டக் கட்டுப்பாடுகள், தனிமைப்படுத்தல், உடல் மற்றும் பாலியல் வன்முறை, அச்சுறுத்தல், அடையாள ஆவணங்களை எடுத்து வைத்துகொள்ளுதல், சம்பளம் கொடுக்காமல் இருத்தல், கொத்தடிமை, மோசமான வேலை மற்றும் வாழ்க்கை நிலைமைகள் மற்றும் கூடுதல் நேர வேலை போன்றவை அடங்கும்.
அக்டோபரில், மனிதவளத்துறை அமைச்சர் எம் சரவணன், “பிற பெரிய நிறுவனங்கள்” சிபிபி-யின் நடவடிக்கையை எதிர்கொள்ள நேரிடும் என்று கூறியபோது, பொருளாதாரத் தடைகளின் இலக்காக தான் இருக்கலாம் என்று சைம் டார்பி வெளிப்படையாக கவலை தெரிவித்தது.
அக்டோபர் 2-ம் தேதி, ஹாங்காங்கைத் தளமாகக் கொண்ட ஆட்கடத்தல் தடுப்பு தன்னார்வத் தொண்டு நிறுவனமான லிபர்ட்டி ஷேர்ட்’டின் (Liberty Shared) குற்றச்சாட்டின் பேரில் சிபிபி-யைத் தொடர்புகொள்ள முயன்றதாக அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.
கட்டாய உழைப்பு மற்றும் குழந்தைத் தொழிலாளர் குறித்த குற்றச்சாட்டுகள் தொடர்பாக, அத்தன்னார்வத் தொண்டு நிறுவனம் சிபிபி-க்கு ஒரு மனுவை தாக்கல் செய்தது, ஆனால் அந்த நேரத்தில் சைம் டார்பி தனது தரப்பு குற்றச்சாட்டுகளுக்குப் பதிலளித்ததாகவும் அவற்றை நிவர்த்தி செய்வதற்கான திட்டங்களை மேற்கொண்டு வருவதாகவும் கூறியது.
“நாங்கள் சிபிபி-யுடன் பேச்சுவார்த்தை நடத்த முயற்சித்தபோது, எங்களுக்கு விளக்கம் அளிக்க வாய்ப்பு கிடைக்கவில்லை, மேலும் சைம் டார்பிக்கு லிபர்ட்டி ஷேர்ட்’டின் குற்றச்சாட்டுகள் குறித்த விவரங்களும் வழங்கப்படவில்லை,” என்று அது அப்போது கூறியது.