கோவிட் 19 : ஆண்டின் இறுதி நாளான இன்று, ஆக அதிகப் புதிய நேர்வுகள் – 2,525  

இன்று, 2,525 புதிய கோவிட் -19 நேர்வுகள் பதிவாகியுள்ளதாகவும், அவற்றுள் கிட்டத்தட்ட பாதி வழக்குகள் சிலாங்கூரில் என்றும் சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது.

ஐந்து நாட்களுக்கு முன்பு, டிசம்பர் 26-ல் பதிவான 2,335 நேர்வுகள் சாதனையை அது மீறுகிறது.

இன்று 1,481 நோயாளிகள் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். அவசரப் பிரிவில் 131 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர், அவர்களில் 60 பேருக்குச் சுவாசக் கருவியின் உதவி தேவைப்படுகிறது.

இன்று, 8 நோயாளிகள் இந்நோய்க்குப் பலியாகியுள்ளனர். சுங்கை பூலோ மருத்துவமனையில் 3 மரணங்களும், குளுவாங் ஹஜா கல்சோம் மருத்துவமனை, ஜொகூர் பாரு சுல்தானா அமீனா மருத்துவமனை, கோத்த பாரு இராஜா பெரும்புவான் ஜைனாப் மருத்துவமனை, சிரம்பான் துவாங்கு ஜாஃபார் மருத்துவமனை மற்றும் அலோர் ஸ்டார் சுல்தானா பஹியா மருத்துவமனை ஆகியவற்றில் தலா ஒரு மரணம் நேர்ந்துள்ளது.

பெர்லிஸில் இன்று புதியத் தொற்றுகள் எதுவும் பதிவாகவில்லை எனச் சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

மாநிலம் வாரியாகப் புதியத் தொற்றுகளின் எண்ணிக்கை :-

சிலாங்கூரில் 1,205, சபாவில் 299, மலாக்காவில் 239, கோலாலம்பூரில் 222, ஜொகூரில் 194, பினாங்கில் 92, நெகிரி செம்பிலான் 78, லாபுவானில் 63, கிளந்தானில் 37, பேராக்கில் 33, கெடாவில் 24, திரெங்கானுவில் 17, பஹாங்கில் 15, புத்ராஜெயாவில் 5, சரவாக்கில் 2.

மேலும் இன்று, 5 புதியத் திரளைகள் கண்டறியப்பட்டுள்ளன.

ஜாலான் காலா திரளை – சிலாங்கூர், கிள்ளான் மாவட்டம்; ஜாலான் டத்தோக் திரளை – சிலாங்கூர், தித்திவங்சா, கெப்போங், லெம்பா பந்தாய், கிள்ளான், உலு லங்காட் & புத்ராஜயா; கம்போங் பஹாரு திரளை – ஜொகூர், பொந்தியான் & ஜொகூர் பாரு மாவட்டங்கள்; பெகெலிலிங் திரளை – ஜொகூர், ஜொகூர் பாரு மாவட்டம்; ஜாலான் இராசா திரளை – சிரம்பான் & புத்ராஜெயா.