மீட்புநிலை நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணையை (பி.கே.பி.பி.) நீட்டிப்பதாக அரசாங்கம் அறிவித்துள்ளது.
நள்ளிரவில், முந்தைய ஆணை முடிவடைந்ததைத் தொடர்ந்து, அரசாங்கம் 2021 மார்ச் 31 வரை, பி.கே.பி.பி. மீண்டும் நீட்டித்தது.
மற்றவற்றுடன், கோவிட் -19 நோய்த்தொற்றைத் தடுக்கவும் கட்டுப்படுத்தவும் எந்தவொரு விதிமுறைகளையும் வெளியிட, சுகாதாரத் தலைமை இயக்குநருக்கு இந்த விதிகள் அனுமதிக்கின்றன.
உள்ளூர் மற்றும் வெளியூர் சுற்றுலா, இரவு / கேளிக்கை விடுதிகள் நடவடிக்கைகள் (இரவு / கேளிக்கை விடுதிகளில் உணவக வணிகம் தவிர), மற்றும் சமூக இடைவெளியை மேற்கொள்ள கடினமான நடவடிக்கைகள் அனைத்தும் தடைசெய்யப்பட்டுள்ளன.
விதிகளை மீறுபவர்களுக்கு RM1,000 வரை தண்டம் அல்லது ஆறு மாதங்கள் வரை சிறைத்தண்டனை அல்லது இரண்டையும் விதிக்கலாம்.