இன்று மோசமான மற்றும் ஆபத்தான வானிலை எச்சரிக்கையை, மலேசிய வானிலை ஆய்வுத் துறை (மெட்மலேசியா) வெளியிட்டுள்ளது.
தீபகற்பத்தின் நான்கு மாநிலங்களிலும், சபாவின் பல பகுதிகளிலும் இன்று பலத்த மழை பெய்யக்கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
பஹாங்கில், குவாந்தான், பெக்கான் மற்றும் ரொம்பின் மாவட்டங்களிலும், ஜொகூரில் சிகாமாட், குளுவாங், மெர்சிங், கூலாய், கோத்தா திங்கி மற்றும் ஜொகூர் பாரு மாவட்டங்களிலும் தொடர்ச்சியான கனமழையுடன் மோசமான வானிலை நிலவும் என்று மெட்மலேசியா இன்று அதிகாலை ஓர் அறிக்கையில் தெரிவித்தது.
அந்த அறிக்கையின்படி, கிளாந்தான், திரெங்கானு மாநிலங்கள் மற்றும் ஜொகூர் பத்து பஹாட் மற்றும் பொந்தியான் மாவட்டங்களில் பலத்த மழை பெய்யும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
பலத்த மழைக்கான வானிலை எச்சரிக்கைகள் பஹாங் (லிப்பிஸ், ஜெரண்டூட், தெமர்லோ, மாரன் மற்றும் பெரா) மற்றும் சபா (துவாரன், ரனாவ், கோத்த பெலுட், தெலுபிட், பெலூரான், சண்டகான் மற்றும் கூடாட்) ஆகியவற்றிலும் ஏற்படும் என்று கணிக்கப்பட்டுள்ளது.
- பெர்னாமா