கோவிட் 19 | நாட்டில் இன்று, 3,170 புதியக் கோவிட் -19 நேர்வுகள் பதிவாகியுள்ளதாகவும் அதிக எண்ணிக்கையிலான நோயாளிகள் மோசமான நிலையில் உள்ளதாகவும் சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது.
சிலாங்கூரும் கோலாலம்பூரும் தொடர்ந்து அதிக எண்ணிக்கையிலான புதிய பாதிப்புகளைப் பதிவு செய்துள்ள போதிலும், அவை 35.4 விழுக்காடு மட்டுமே, காரணம் மற்ற 11 மாநிலங்களில் புதிய பாதிப்புகளின் எண்ணிக்கை 3 இலக்கங்களைக் கொண்டுள்ளது.
2,490 நோயாளிகள் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். அவசரப் பிரிவில் 260 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர், அவர்களில் 103 பேருக்குச் சுவாசக் கருவியின் உதவி தேவைப்படுகிறது.
நாட்டில் இன்று அனைத்து மாநிலங்களிலும் புதியத் தொற்றுகள் பதிவாகியுள்ளன.
மாநிலங்கள் வாரியாகப் புதியத் தொற்றின் எண்ணிக்கை பின்வருமாறு :- கோலாலம்பூர் (576), சிலாங்கூர் (545), ஜொகூர் (423), சபா (401), பேராக் (245), பினாங்கு (171), கெடா (156), கிளந்தான் (135), சரவாக் (132), நெகிரி செம்பிலான் (102), மலாக்கா (106), திரெங்கானு (57), பஹாங் (48), புத்ராஜெயா (33), லாபுவான் (32), பெர்லிஸ் (8).
இன்று, 12 பேர் இந்நோய்க்குப் பலியாகியுள்ளனர். ஆக மொத்தம் இதுவரை நாட்டில் 642 பேர் மரணமடைந்துள்ளனர்.
மேலும் இன்று 16 புதியத் திரளைகளும் கண்டறியப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சர் டாக்டர் நூர் ஹிஷாம் சொன்னார்.