நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணை (பி.கே.பி.) அமலாக்கத்தின் வழி, கோவிட் -19 தொற்றுநோய் பரவலைத் தடுப்பதில், அரசாங்கம் தோல்வி கண்டதைத் தொடர்ந்து, பி.கே.ஆர். மகளிர் ‘சமூக விழிப்புணர்வு இயக்கம்’ ஒன்றைத் தொடங்கினர்.
நேற்று நடந்த மாதாந்திரக் கூட்டத்தில், இந்த முடிவு எட்டப்பட்டதாகப் பி.கே.ஆர். மகளிர் தகவல் தொடர்பு இயக்குநர் லோ கெர் சியான் கூறினார்.
இதற்கு பி.கே.ஆர். மகளிர் தலைவர் புஸியா சால்லே தலைமை தாங்குகிறார்.
“ஜனவரி 13-ஆம் தேதி தொடங்கியப் பி.கே.பி. நடைமுறை தோல்வியுற்றுள்ளது, மலேசியாவில் நான்கு இலக்கங்களில் பாதிப்புகளின் அதிகரிப்பு உள்ளது. மேலும், ஜனவரி 29 முதல் தொடர்ச்சியாக 5,000-க்கும் மேற்பட்ட நேர்மறையான பாதிப்புகள், நாடு மிகவும் பயங்கரமான அலையை நோக்கி செல்கிறது என்று பி.கே.ஆர். மகளிர் கருதுகின்றனர்.
“சமீபத்திய நிலைமை அனைத்து மலேசியர்களுக்கும் மிகுந்த கவலையை ஏற்படுத்தியுள்ளது, இதில் உயிருக்கு ஆபத்து மட்டுமின்றி பொருளாதார, சமூக மற்றும் சுகாதார அழுத்தங்களை மக்கள் மீது திணிக்கின்றது.
“தற்போதையப் பிரதமரின் தலைமையால், வாழ்க்கையையும் வாழ்வாதாரத்தையும் சமப்படுத்த முடியவில்லை என்பதை இது நிரூபிக்கப்பட்டுள்ளது,” என்று அவர் இன்று ஓர் அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
மக்களை இனி கவனித்துக்கொள்ள முடியாது என்பது நிரூபிக்கப்பட்டுள்ளதால், தற்போதைய அரசாங்கம் மரியாதையுடன் விலக வேண்டும் என்று லோ கூறினார்.
“எனவே, சமூகத்தின் நல்வாழ்வுக்காக வாழ்க்கைத் தரம், பொதுப் பாதுகாப்பு மற்றும் சமூகப் பங்களிப்பை மேம்படுத்துவதற்காக, பி.கே.ஆர். மகளிர் பிரிவு ‘சமூக விழிப்புணர்வு’ (Komuniti Waspada @ Community Alert) எனப்படும் சமூக மேம்பாட்டு மாதிரியைச் செயல்படுத்த முடிவு செய்துள்ளது,” என்று அவர் கூறினார் கூறினார்.